TNPSC – Study Materials-GROUP-4, VAO ,TAMIL (QUESTION/ ANSWER)-5.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை
தமிழ் – இலக்கணம்
* தமிழ் மொழியில் உள்ள மிகப்பழமையான இலக்கணநூல் – தொல்காப்பியம்
* தொல்காப்பியத்தைச் சார்ந்து எழுந்த இலக்கணநூல் – நன்னூல்
* நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் (காலம் 12, 13 கி.பி.நூற்றாண்டு)
* நன்னூலில் உள்ள நூற்பாக்கள் – 462
* நன்னூலின் வேறு பெயர்கள் – சிற்றதிகாரம், சின்னூல், பின்னூல்
* நூல்கள் மூவகைப்படும் (அகத்தியம்-முதல் நூல், தொல்காப்பியம்-வழிநூல், நன்னூல்-சார்பு நூல்(புடை நூல்)
* எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும் – பன்னிரண்டு
* மனிதர்களைப் போல எழுத்துக்களுக்கும் நட்பும், இனமும் உண்டு.
* நட்பு எழுத்துக்களை இன எழுத்துக்கள் என மரபிலக்கணம் கூறுகிறது.
* எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை. முதல் எழுத்து, சார்பெழுத்து
* முதல் எழுத்துக்கள் – 30 (உயிரெழுத்து – 12, மெய்யெழுத்து – 18)
* சார்பெழுத்துக்கள் – 10
* தமிழ் எழுத்துக்கள் மொத்தம் – 247
* குறில் எழுத்துக்கள் – 5, நெடில் எழுத்துக்கள் – 7
* உயிர்மெய் குறில் எழுத்துக்கள் – 90.
* உயிர்மெய் நெடில் எழுத்து – 126
* மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். (வல்லினம்-6, மெல்லினம்-6, இடையினம்-6)
* தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் – உடனிலைமெய்மயக்கம்
* ர, ழ – என்னும் இரண்டு மெய்களும் தம்முடன் தான் மயங்காது.
* தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்கள் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
* ஆய்தம் சார்பெழுத்து வகையைச் சேர்ந்தது.
* உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்து வகையில் அடங்கும்.
* ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அக்கேணம் என்பவன.
* ஆய்த எழுத்து ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
* சுட்டுப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் – சுட்டு எழுத்துக்கள்.
* சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை தருவது – அகச்சுட்டு (எ.கா. அவன், இவன்)
* சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை தகருவது – புறச்சுட்டு (எ.கா. அக்குதிரை)
* தொலைவில் உள்ளதைச் சுட்டும் எழுத்து – சேய்மைச்சுட்டு (அவன்)
* அருகில் உள்ளதை சுட்டும் எழுத்து – அண்மைச்சுட்டு (இவன்)
* அ, இ, என்னும் சுட்டுடெழுத்துக்கள் அந்த , இந்த எனத் திரிந்து வழங்குவதை – சுட்டுத் திரிபு.
* நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து – “உ”
* வினாப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் – வினா எழுத்துக்கள்
* சொற்களின் முதலில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் – எ, யா (எது?, யார்?)
* சொற்களின் இறுதியில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் – ஓ, ஆ (அவனோ?, அதுவா?)
* சொல்லின் முதலிலும், இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்து – ஏ, (ஏன்? அன்றோ?)
* உயிர் எழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு நெட்டெழுத்துக்கள் இனமாகும்.
* வல்லின மெய்யெழுத்துகளுக்கு மெல்லினமெய் இனமாகும்.
* எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு – மாத்திரை ஆகும்
* குறில் – 1 மாத்திரை, நெடில் – 2 மாத்திரை
* ஆய்தத்திற்கும், மெய்யெழுத்துக்களுக்கும் 1/2 மாத்திரை.
* உயிரளபெடைக்கு மூன்று மாத்திரை, ஒற்றளபெடைக்கு 1 மாத்திரை
* செய்யுளிசை அளபெடை ஈரசை கொண்ட சீர்களாக மட்டும் வரும். (உழாஅர், படா அர்)
* செய்யுளிசை அளபெடையை இசைநிறையளபெடை என்றும் வழங்குவர் (அளபெடை என்பதன்பொருள் நீண்டு ஒலித்தல்)
* ஓசை குறையாத போதும் இனிய இசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை(செய்யுளில்)
* இன்னிசை அளபெடை மூவசை சீர்களாக மட்டும் வரும்(கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்)
* பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப்பொருளில் வருவது – சொல்லிசை அளபெடை