TNPSC – Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER)-5.

 TNPSC – Study Materials-GROUP-4, VAO ,TAMIL (QUESTION/ ANSWER)-5.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை

தமிழ் – இலக்கணம் 

* தமிழ் மொழியில் உள்ள மிகப்பழமையான இலக்கணநூல் – தொல்காப்பியம்

* தொல்காப்பியத்தைச் சார்ந்து எழுந்த இலக்கணநூல்  – நன்னூல்

* நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர் (காலம் 12, 13 கி.பி.நூற்றாண்டு)

* நன்னூலில் உள்ள நூற்பாக்கள் – 462

* நன்னூலின் வேறு பெயர்கள் – சிற்றதிகாரம், சின்னூல், பின்னூல்

* நூல்கள் மூவகைப்படும் (அகத்தியம்-முதல் நூல், தொல்காப்பியம்-வழிநூல், நன்னூல்-சார்பு நூல்(புடை நூல்)

* எழுத்திலக்கணம் எத்தனை வகைப்படும் – பன்னிரண்டு

* மனிதர்களைப் போல எழுத்துக்களுக்கும் நட்பும், இனமும் உண்டு.

* நட்பு எழுத்துக்களை இன எழுத்துக்கள் என மரபிலக்கணம் கூறுகிறது.

* எழுத்துக்கள் இரண்டு வகைப்படும். அவை. முதல் எழுத்து, சார்பெழுத்து

* முதல் எழுத்துக்கள் – 30 (உயிரெழுத்து – 12, மெய்யெழுத்து – 18)

* சார்பெழுத்துக்கள் – 10

* தமிழ் எழுத்துக்கள் மொத்தம் – 247

* குறில் எழுத்துக்கள் – 5, நெடில் எழுத்துக்கள் – 7

* உயிர்மெய் குறில் எழுத்துக்கள் – 90.

* உயிர்மெய் நெடில் எழுத்து – 126

* மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். (வல்லினம்-6, மெல்லினம்-6, இடையினம்-6)

* தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துக்கள் – உடனிலைமெய்மயக்கம்

* ர, ழ – என்னும் இரண்டு மெய்களும் தம்முடன் தான் மயங்காது.

* தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்கள் – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

* ஆய்தம் சார்பெழுத்து வகையைச் சேர்ந்தது.

* உயிர்மெய் எழுத்துக்கள் சார்பெழுத்து வகையில் அடங்கும்.

* ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை, அக்கேணம் என்பவன.

* ஆய்த எழுத்து ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும்.

* சுட்டுப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் – சுட்டு எழுத்துக்கள்.

* சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை தருவது – அகச்சுட்டு (எ.கா. அவன், இவன்)

*  சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை தகருவது – புறச்சுட்டு (எ.கா. அக்குதிரை)

*   தொலைவில் உள்ளதைச் சுட்டும் எழுத்து – சேய்மைச்சுட்டு (அவன்)

*   அருகில் உள்ளதை சுட்டும் எழுத்து – அண்மைச்சுட்டு (இவன்)

  *   அ, இ, என்னும் சுட்டுடெழுத்துக்கள் அந்த , இந்த எனத் திரிந்து வழங்குவதை – சுட்டுத் திரிபு.

*   நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து – “உ”

*   வினாப்பொருளை உணர்த்தும் எழுத்துக்கள் – வினா எழுத்துக்கள்

*   சொற்களின் முதலில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் – எ, யா (எது?, யார்?)

*   சொற்களின் இறுதியில் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்துக்கள் – ஓ, ஆ (அவனோ?, அதுவா?)

*   சொல்லின் முதலிலும், இறுதியிலும் நின்று வினாப்பொருளைத் தரும் எழுத்து – ஏ, (ஏன்? அன்றோ?)

*   உயிர் எழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு நெட்டெழுத்துக்கள் இனமாகும்.

*   வல்லின மெய்யெழுத்துகளுக்கு மெல்லினமெய் இனமாகும்.

*   எழுத்துகள் ஒலிக்கும் காலஅளவு – மாத்திரை ஆகும்

*   குறில் – 1 மாத்திரை, நெடில் – 2 மாத்திரை

*   ஆய்தத்திற்கும், மெய்யெழுத்துக்களுக்கும் 1/2 மாத்திரை.

*   உயிரளபெடைக்கு மூன்று மாத்திரை, ஒற்றளபெடைக்கு 1 மாத்திரை

*  செய்யுளிசை அளபெடை ஈரசை கொண்ட சீர்களாக மட்டும் வரும். (உழாஅர், படா அர்)

* செய்யுளிசை அளபெடையை இசைநிறையளபெடை என்றும் வழங்குவர் (அளபெடை என்பதன்பொருள் நீண்டு ஒலித்தல்)

* ஓசை குறையாத போதும் இனிய இசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை(செய்யுளில்)

*  இன்னிசை அளபெடை மூவசை சீர்களாக மட்டும் வரும்(கொடுப்பதூஉம், எடுப்பதூஉம்)

*   பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப்பொருளில் வருவது – சொல்லிசை அளபெடை

Leave a Comment