TNPSC - Study Materials-GROUP-4, VAO ,TAMIL (QUESTION/ ANSWER)-6. - Tamil Crowd (Health Care)

TNPSC – Study Materials-GROUP-4, VAO ,TAMIL (QUESTION/ ANSWER)-6.

 TNPSC – Study Materials-GROUP-4, VAO ,TAMIL (QUESTION/ ANSWER)-6.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை

* திணை இருவகைப்படும்.

* பெயர்ச்சொற்களை உயர்திணைப்பெயர், அஃறிணைப் எனப் பிரிக்கிறோம்.

* ஆண்பால் பெயர்ச்சொற்கள் ஆண்பால் வினை முடிவையே பெறும்.

* எண் இரு வகைப்படும். இடம் மூன்று வகைப்படும்.

 * மொழியின் அடிப்படை உறுப்புகள் – எழுத்து, சொல், சொற்றொடர்

* எல்லா எழுத்துக்களுக்கும் அடிப்படையானது ஒலி

* திணை என்பது ஒழுக்கம். திணையின் உட்பிரிவு பால்

* எழுத்தினால் அமைக்கப்பட்டு, பொருளை அறிந்து கொள்வதற்கு கருவியாக இருக்கும் ஒலியே சொல் ஆகும்.

* இலக்கண வகையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

* இலக்கிய வகையில் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

* பெயர்சொல் ஆறு வகைப்படும்.

* பொருளின் செயலை, இயக்கத்தை உணர்த்தும் சொல் வினைச்சொல்

* வினைச்சொல் காலம் காட்டும், வேற்றுமை உருபை ஏற்காது

* பெயர்ச்சொல், வினைச்சொற்களை இடமாகக் கொண்டு வரும் சொற்கள் இடைச்சொல் (இடை-இடம்)

* இடைச்சொற்கள் தனியாக வந்தால் பொருள் தராது.

* பெயர்ச் சொல், வினைச்சொற்களைச் சார்ந்து அவற்றின் குணத்தை உணர்த்தி வரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படும்.

* உரிச்சொற்கள் இருவகைப்படும்.

* கடி என்பது பலகுணம் தழுவிய ஓர் உரிச்சொல்

* இயல்பால் அமைந்த தமிழ்ச்சொல் இயற்சொல் எனப்படும்.

* இயற்சொல் இரு வகைப்படும்.

* பசு, காற்று, செடி, குடம் – பெயர் இயற்சொல் சிரித்தான், பறந்தது, மேயந்தன – வினை இயற்சொல்

* கற்றவர்கள் மட்டுமே பொருள் அறியும் வகையில் அமைந்த சொற்கள் திரிசொல் எனப்படும்.

* திரிசொல் இரண்டு வகைப்படும்.

* வடமொழிச்சொல் திரிந்தும், திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை வடசொல் எனப்படும்.

* தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிற பகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொல் திசைச்சொற்கள்

* எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப் பெயர்.

* காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப் பெயர்கள்

* காடு என்பது இடுகுறிப் பொதுப்பெயர்

* பனை – என்பது இடுகுறிச் சிறப்புப் பெயர்

* பறவை – காரணப் பொதுப் பெயர்

* மரங்கொத்தி – காரணச் சிறப்பு பெயர்

* செயல் முடிந்ததைக் குறிக்கும் சொல் – வினைமுற்று

* வினைமுற்று காலம் காட்டும். திணை ,பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும்(காட்டும்).

* முற்று பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

* முற்றுப் பெறாத வினைச்சொல் பெயரைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம், வினையைக் கொண்டு முடிந்தால் வினையெச்சம்.

* பெயர்ச்சொல்லின் பொருள் வேறுபடுவதை வேற்றுமை என்பர். வேற்றுமை எட்டு வகைப்படும்.

* எழுவாய்(இயல்பான பெயர்) பயனிலைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை (அ) எழுவாய் வேற்றுமை.

* முதல் வேற்றுமை, வினை, பெயர், வினா ஆகியவற்றைப் பயனிலையாகக் கொண்டு முடியும்.

* கர்ணன் வந்தான் – வினைப்பயனிலை

* அவன் இராமன் – பெயர்ப் பயனிலை

* அவன் யார்? – வினாப் பயனிலை

* முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.

* பெயர்ச் சொல்லினது பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை ஆகும்.

* இரண்டாம் வேற்றுமையை செயப்படுபொருள் வேற்றுமை என்றும் வழங்குவர். * இதன் உருபு “ஐ” ஆகும்.

* இரண்டாம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் ஆறு.

* மூன்றாம் வேற்றுமையின் உருபு  ஆல், ஆன், ஒரு, ஓடு

* மூன்றாம் வேற்றுமை தாம் ஏற்ற பெயர்ப்பொருளை கருவி, கருத்தா  உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும்.

* கருவிப் பொருள் இரு வகைப்படும். கருத்தாப் பொருள் இரு வகைப்படும்.

* நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது என்பது இயற்றுதல் கருத்தா.

* கோவில் அரசனால் கட்டப்பட்டது என்பது ஏவுதல் கருத்தா

* எழுவாயின் செயலுடன் பிறிதொன்றனது செயலும் உடன் நிகர்வது

* உடனிகழ்ச்சி பொருள் (தாயோடு குழந்தை சென்றது)

* நான்காம் வேற்றுமையின் உருபு – “கு” ஆகும்

* ஐந்தாம் வேற்றுமையின் உருபுகள் – இல், இன் என்பன.

* ஆறாம் வேற்றுமையின் உருபு – “அது”

* ஏழாம் வேற்றுமைக்குக் கண், உள், மேல், கீழ் என்பன உருபுகள் ஆகும்.

* எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை இதனை விளிவேற்றுமை என்பர்.

* ஒரு சொல்லின் முதல், இடை, கடை எழுத்து மாறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பது போலி.

* போலி மூன்று வகைப்படும்.

* முதல் போலி – மஞ்சு – மைஞ்சு, மயல் – மையம்

* இடைப்போலி – முரசு – முரைசு, அரசியல் – அரைசியல்

* கடைப்போலி – அறம் – அறன், பந்தல் – பந்தர்

* முற்றுப்போலி – அஞ்சு – ஐந்து

* எழுத்து தனித்தோ, தொடர்ந்தோ பொருள் தருமானால் அது சொல்

* பதம், கிளவி, மொழி என்பன சொல்லின் வேறு பெயர்கள்.

* ஓரெழுத்து தனித்து தொடர்ந்தோ பொருள் தருமானால் அது சொல்.

* தமிழில் ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளன.

* பகுத்தல் என்பதன் பொருள் பிரித்தல்

* பதம் இரு வகைப்படும். பிரிக்கவியலாத சொல் பகாப்பதம், பகுக்க இயலும் சொற்கள் பகுபதம் என்பர்.

* பகாப்பதம் நான் வகைப்படும்.

* பகுப்பதம் இரு வகைப்படும்.

* பகுபத உறுப்புகள் ஆறு.

* பகுபதத்தில் அவசியம் இருக்க வேண்டியவை பகுதி, விகுதி

* இடைச்சொற்கள் பகாப்பதம் ஆகும்.

* ஏவல் வினையாக அமைவது வினைப் பகுபதம் ஆகும்.

* கண்டிலன் என்பதில் அமைந்துள்ள இடைநிலை – இல்.

* பெயர் பகுபதம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறன் அடியாகத் தோன்றும்.

* காலம் காட்டும் இடைநிலைகள் மூன்று.

* வழக்கு என்பதை மரபு என்றும் கூறுவர். வழக்கு இரு வகைப்படும்.

* இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். இல்முன் என்பதை முன்றில் எனக் கூறுவது.

இலக்கணப்போலி

* இறந்தவரைத் துஞ்சினார் (இறைவனடி சேர்ந்தார்) என்பது மங்கல வழக்கு.

* தஞ்சாவூரைத் தஞ்சை என வழங்குவது மரூஉ

* விளக்கைக் குளிரவை என்பது மங்கல வழக்கு.

* கள்ளைச் சொல் விளம்பி என்று கூறுவது குமூஉக்குறி

* கால்கழுவி வந்தேன் என்று கூறுவது இடக்கரக்கடல்

* காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை

* தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும்.

மல்லிகைப் பூ – என்பதில் மல்லிகை என்பது சிறப்புப் பெயர். பூ என்பது பொதுப்பெயர்.

வளப்பிறை என்பது வினைத்தொகை. செம்மொழி என்பது பண்புத்தொகை

கயல்விழி என்பது உவமைத்தொகை. மா, பலா, வழை என்பது உம்மைத்தொகை.

பவளவாய் பேசினாள் என்பது அன்மொழித்தொகை.

* முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை

* தொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும்.

* மற்றுப்பிற என்னும் தொடரில் “மற்று”  என்பது இடைச்சொல்

* சாலப்பகிர்ந்து என்பது உரிச்சொல் தொடர். கூடிப் பேசினார் என்னும் தொடர் பெயரெச்சத்தொடர் ஆகும்.

* கண்ணா வா! விளித்தொடர். வந்தான் இராமன்-வினைமுற்று தொடர். உடைந்த நாற்காலி பெயரெச்சத் தொடர். வந்து நின்றான் – வினையெச்சத் தொடர், கபிலன் வந்தான் – எழுவாய்த் தொடர், வீட்டை கட்டினான்-வேற்றுமைத்தொகாநிலைத் தொடர்.

* ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.

* சினையின் பெயர் முதலுக்கு ஆகிவருவதை சினை ஆகு பெயர்.

* முதல் பொருளின் பெயர் சினைக்கு ஆகி வருவதை பொருளாகு பெயர் (முதலாகு பெயர்) என்று கூறுவர்.

* ஊர் திரண்டது என்னும் தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் – இடவாகு பெயர்.

* வெற்றிலை நட்டான் என்னும் தொடர் சினையாகு பெயர்.

* இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.

* காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறஉ ஒரு பொருளுக்கு ஆகிவருவது காலவாகு பெயர். எ.கா. டிசம்பர் பூ.

* செவலையை வண்டியில் பூட்டு என்னும் தொடர் பண்பாகு பெயர்.

* பண்பாகு பெயரை குணவாகு பெயர் எனவும் வழங்குவர் (நீலம் சூடினாள்).

* வறுவல் தின்றான் என்பது தொழிலாகு பெயர். தொழில் பெயர் தொழிலைக் குறிக்காமல் அத்தொழிலால் ஆகும் உணவைக் குறிப்பது தொழிலாகு பெயர்.

* அளவைக் குறிக்கும் பெயர்களை அளவைப்பெயர்கள் என்பர்.

* அளவைப்பெயர்கள் நான்கு வகைப்படும்.

* எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய பொருளுக்கு பெயராகி வருவது எண்ணலளவை ஆகுபெயர். (ஒன்றஉ பெற்றால் ஒளிமயம்)

* எடுத்தல் அளவைப் பெயர். அவ்வளவைக் குறிக்காமல் அவ்வளவுடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு) ஆகி வருவது எடுத்தலளவை ஆகுபெயர். (ஐந்து கிலோ என்ன விலை)

* முகத்தில் அளவைப் பெயர். அவ்வளடைய பொருளுக்கு பெயராகி வருவது முகத்தலளவை ஆகுப்பெயர். (நான்கு லிட்டர் கொடு)

* நீட்டல் அளவை பெயருக்குச் சான்று மூன்று மீட்டர் கொடு.

* வள்ளுவர் சொல் வாழ்க்கைக்கு இனிது இத்தொடர் சொல்லாகு பெயர்.

* தயிரை இறக்கு இத்தொடர் தானியாகு பெயர்.

* தானம் தானிக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.

* தானி (பொருள்) தானிகு ஆகி வருவது கருவியாகு பெயர்.

* கருவிப்பொருள் காரியத்திற்கு ஆகி வருவது கருவியாகு பெயர்.

* காரியப் பொருள் கருவிக்கு ஆகி வருவது காரியவாகு பெயர் (எ.கா. வீணைகேட்டு மெய்ம் மறந்தேன்)

* திருவள்ளுவரைப் படித்துப்பார். இத்தொடர் கருத்தாவாகு பெயர்.

* நாரதர் வருகிறார். இத்தொடர் உவமையாகு பெயர்.

* ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே. வழாநிலை, வழு, வழுவமைதி

* இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும், எழுதுவதும் வழாநிலை. வழாநிலை அறுவகைப்படும்.

* அரசன் வந்தான், மாடு வந்தது – திணை வழா நிலை

* கண்ணன் வந்தான், நாய் ஓடியது – பால் வழா நிலை

* நான் வந்தேன் , நீ வருவாய் – இடவழா நிலை

* நாளே வருவேன், நேற்றுப் படித்தேன் – கால வழா நிலை

* தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் – வினா வழா நிலை

* தமிழ்நாட்டின் தலைநகரம் எது? என்னும் வினாவிற்கு சென்னை என விடையளித்தல் – விடை வழா நிலை.

* இலக்கண முறையின்றிப் பேசுவதும், எழுதுவதும் வழு எனப்படும். வழு ஏழு வகைப்படும்.

* என் மாமா வந்தது திணை வழு, கபிலன் பேசினான் பால் வழு, நாங்கள் வந்தார்கள் – இட வழு, கமலா நாளை வந்தாள் – கால வழு, முட்டையிட்டது சேவலா, * பெட்டையா? வினாவழு, நாளை பள்ளி திறக்கப்படுமா? என்ற வினாவிற்கு என் மாமாவிற்கு உடல் நலமில்லை எனக் கூறுவது – விடை வழு, நாய் கத்தும் – மரபு வழு.

* இலக்கண முறையில்லா விடினும் இலக்கணமுடையதாக ஏற்றுக்கொள்வது வழுவமைதி

* பசுவைப் பார்த்து என இலட்சுமி வந்துவிட்டான் எனக் குறுவது – திணைவழுவமைதி.

* குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – இத்தொடர் காலவழுவமைதி

* பெயர்ச்சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது மூன்றாம் வேற்றுமை.

* கிழமைப் பொருளில் வருவது ஆறாம் வேற்றுமை.

* இராமனுக்குத் தம்பி இலக்குவனன். இதிலுள்ள வேற்றும் உருபு முறை பொருளில் வந்துள்ளது.

* கருவி கருத்தா ஆகிய பொருள்களில் வரும் உருபு ஆல், ஆன்.

* ஐந்தாம் வேற்றுமையில் “இல்” உருபு ஒப்பு, ஏது, நீக்கல் பொருள்களில் வரும்.

* ஏழாம் வேற்றுமையில் இல் உருபு இடப்பொருளில் வரும்.

* படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க எட்டாம் வேற்றுமை பயன்படுகிறது.

Leave a Comment