PLUS TWO: மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை -தொடர்பாக விரைவில் அறிவிப்பு..!!
தமிழகத்தில் PLUS TWO மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவினர் ஐந்து வகையான மதிப்பீட்டு முறைகளை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக CBSE, PLUS TWO மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிட்டது போலவே தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
10,11ஆம் வகுப்பு மதிப்பெண்களோடு, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளின் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே, 12ஆம் வகுப்பு மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை தேர்வுத்துறை கோரியுள்ள நிலையில், மதிப்பெண் கணக்கீட்டில் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.