ஆஸ்துமா,சர்க்கரை வியாதி ,நுரையீரல் சம்பந்தப்பட்ட
வியாதிகளைக் குணமாக்க சில யோகாசனங்கள்(YOGASANAM)
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஏதாவது உடல் உபாதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். நவீனகால உணவு பழக்கம், சரியான, முறையான உடற்பயிற்சி இல்லாமை, மனஅழுத்தம், மரபு சார்ந்த வியாதிகள், பருவநிலை மாற்றம், நுண்ணுயிரிகளின் வளர்ச்சியால் உண்டாகும் புதிய வகை நோய்கள் இவ்வாறு பல நிலைகளின் காரணமாக மனிதகுலம் பல இன்னல்களை சந்திக்கிறது.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் மருந்துகள் மூலம் மட்டுமல்லாது சில யோகாசனம் மூலமும் பல வியாதிகளுக்கு தீர்வு காண இயலும். ஆஸ்துமா,சர்க்கரை வியாதி ,நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் குணமாக்க சில யோகாசனங்கள்(Yogasana) பற்றி இங்கு காண்போம்.
1)மத்ச்யாசனம்(மீனின் தோற்றம்)
2)சவாசனம்
1)மத்ச்யாசனம் MATSYASANA(மீனின் தோற்றம்);
மச்சம் என்றால் மீன் என்று பொருள்
மத்ச்யாசனம்(Matsyasana)-என்பது மீனின் அமைப்புடைய ஆசனம். இறுதி நிலையை அடைய இரண்டு முறைகள் உள்ளன.
- உட்கார்ந்து கொண்டு ஆரம்பிப்பது
- படுத்துக் கொண்டு ஆரம்பிப்பது
உடலை மேலே தூக்கும் போது மூச்சை உள் இழுக்க வேண்டும். கீழே கொண்டு வரும் போது மூச்சை வெளியே விட வேண்டும்.
குறிப்பு;
இரத்த அழுத்தம், மேல் முதுகுவலி உள்ளவர்கள் இந்த யோகாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
உட்கார்ந்து கொண்டு ஆரம்பிப்பது;
- காலை முன்னே நீட்டிக் கொண்டு உட்காரவும், வலது காலை வளைத்து இடது காலின் மீது வைக்கவும்.
- இடது காலை மடக்கி வலது கால் தொடையின் மீது வைக்கவும், பத்மாஸனத்தில் உட்காரவும்.
- பின்னே வளையவும், வலது கையின் முழங்கையைப் பக்கவாட்டில் மடித்து பின்பு இடது கையை மடித்து உடலைத் தாங்கிக் கொள்ளவும்.தோள்களுக்கு மேலாக உள்ளங்கைகளை வைக்கவும். தோள்கள் தலையின் இருபக்கத்திலும் இருக்கும் விரல்கள் தோள்களைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
- உள்ளங்கைகள் மீது உடலின் முழு எடையும் இருக்கட்டும். தலையையும்,தோள்களையும் தரையிலிருந்து உயர்த்தவும், தரையில் தலையின் மையப் பகுதி பதிந்து இருக்கட்டும். தலையின் மீது உடலின் பளு அமைந்த பிறகு கைகளை எடுத்து விடவும், கால் கட்டை விரல்களை கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும்.
- மூன்றாம் நிலைக்கு வந்து மெதுவாக தலையை விடுவிக்கவும்.
- இரண்டாம் நிலைக்கு வர வேண்டும்.
- முதல் நிலைக்கு வர வேண்டும்.
- ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.
படுத்துக் கொண்டு ஆரம்பிப்பது;
- தரை விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கைகளைத் தலைக்கு மேலே நீட்டிக் கொள்ளவும். வலது காலை எடுத்து இடது தொடையின் மீது வைக்கவும்.
- இடது காலை வலது தொடையின் மீது வைக்கவும், தலைக்கு இரு புறமும் கையை வைக்கவும்.
பலன்கள்;
மத்ச்யாசனம் செய்வதால் சர்வாங்காஸத்தின் பலன்கள் துரிதமாக கிடைக்கின்றன.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த யோகாசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இவ்வாசனம் நல்லது.
2)சவாசனம் (Savasana yoga):
- கால்களை 1மிட்டர் அகலம் வைத்து தரைமீது மல்லாந்து படுக்கவும்.
- கைகள் அகலம் வைத்து இருக்கட்டும்.
- சர்க்கரை வியாதி,
- ஆஸ்துமா,
- நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதி,
- இரத்த அழுத்தம்,
- மேல் முதுகுவலி உள்ளவர்களுக்கு
சர்க்கரை நோய் குணமாக:
குறிப்பு:
- இருதயக் கோளாறு, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த யோகாசனத்தை கவனமுடன் செய்ய வேண்டும்.
- முதுகுவலி உள்ளவர்கள் இந்த யோகாசனத்தை தவிர்க்கவும்.
- மூச்சை இழுத்துக் கொண்டே ஒரு கையை தோள்பட்டை அளவு உயர்த்தவும்.
- மூச்சை முழுவதுமாக இழுத்துக்கொண்டே கையை காதை ஒட்டிக் கொண்டு வரவேண்டும். உடம்பை நன்கு உயர்த்த வேண்டும்.
- மூச்சை வெளியே விட்டுக் கொண்டு இடுப்பை ஒரு பக்கமாக வளைய வேண்டும். இறுதி நிலையில் சுவாசம் சாதாரணமாக இருக்கவும்.
- மூச்சை முழுவதுமாக இழுத்துக்கொண்டே கையை காதை ஒட்டி மேலே கொண்டு வரவேண்டும்.
- மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முதல் நிலைக்கு வர வேண்டும்.
- முழுவதும் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே ஆரம்ப நிலைக்கு வர வேண்டும்.