10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லையா.? மறு தேர்வு – அமைச்சர் அறிவிப்பு..!!

 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு: மதிப்பெண் திருப்தி இல்லையா.? மறு தேர்வு – அமைச்சர் அறிவிப்பு..!!

“CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டு முறையில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும்” என்று, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க….

8th PASS: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! 

பொதுத் தேர்வுகள் மற்றும் வரவிருக்கும் போட்டித் தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுடன் காணொலி வாயிலாக மத்திய கல்வி அமைச்சர் உரையாடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் இந்த காணொலி உரையாடல் ரத்து செய்யப்பட்டு, கல்வி அமைச்சர் பேசும் ஆடியோ ஒன்று ட்விட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டது.

அந்த ஆடியோவில், “கொரோனா தொற்றுக்கு பிந்தைய உபாதைகள் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப பெற்று வருவதால் பெற்றோர், மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாட முடியவில்லை.

கொரோனா காரணமாக மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

இந்த செய்தியையும் படிங்க….

ரூ.54,000/- ஊதியத்தில் UGC ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!!

மேலும்,12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பீட்டுக்கான விரிவான வழிகாட்டுதல்களை CBSE ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. மதிப்பீட்டில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு, நிலைமை சீரடைந்தவுடன் ஆகஸ்ட் மாதம் தேர்வெழுதும் வாய்ப்பு வழங்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார்.

Leave a Comment