பொதுமக்கள்: பத்திரப்பதிவு கட்டணங்களை இ-சேவை மூலம் செலுத்தலாம்- பதிவுத்துறை நடவடிக்கை..!!

 பொதுமக்கள்: பத்திரப்பதிவு கட்டணங்களை இ-சேவை மூலம் செலுத்தலாம்-பதிவுத்துறை நடவடிக்கை..!!

பத்திரப்பதிவுக்கான கட்டணங்களை பொதுமக்கள் இசேவை மூலம் செலுத்த பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த 2018 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரப்பதிவுக்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்துவதற்கான நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் பலர் நேரடியாக விண்ணப்பிக்காமல் இடைதரகர்களையே அணுகுகின்றனர்.

இந்த செய்தியையும் படிங்க… 

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி-சென்னைப் பல்கலைக் கழகம் அறிவிப்பு..!! 

மேலும், இடைதரகர்களின் வங்கி கணக்கின் மூலம் பத்திரப்பதிவுக்கான கட்டணத்தையும் செலுத்துகின்றனர். இதற்கான கமிஷன் தொகையுடன் சேர்த்து பொதுமக்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆவணத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை ஆவணதாரர்கள் அவர்களது வங்கி கணக்கில் இருந்து தான் செலுத்தப்பட வேண்டும் எனவும் இடைத்தரகர்கள் மூலமாக கட்டணத்தை செலுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வையில் படும் வகையில் அறிவிப்பு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க… 

ஜூலை 31ம் தேதிக்கு பிறகே உயர்கல்வி படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்-உயர் கல்வித்துறை அமைச்சர் ..!! 

டிஐஜி அலுவலகத்தில் திருமண சான்று

இந்திய கிறிஸ்தவ திருமண சட்டத்தின் கீழ் திருமண சான்றிதழின் நகலை பெற தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் தான் மனு அளித்து பெற வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்கள் மிகுந்த தொலைவு பயணம் செய்து, சென்னையில் மனு அளித்து பெறப்பட வேண்டியுள்ளதால், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்திய கிறிஸ்தவ திருமண சான்றிதழ் நகல்களை அந்தந்த மண்டல டிஐஜிக்கள் அலுவலகத்திலேயே பெறும் வகையில் கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment