தனித்தேர்வர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு-தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

 தனித்தேர்வர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு-தமிழக அரசுக்கு கோரிக்கை..!!

தனித்தேர்வர்களுக்கும், தேர்ச்சிக்கான சராசரி மதிப்பெண் நடைமுறையை உருவாக்கி தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், அனைத்து வகுப்பு மாணவர்களும், தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம், தனித்தேர்வர்கள் குறித்து எந்தவொரு அறிவிப்பும் முழுமையாக வெளியிடப்படவில்லை. 

இந்த செய்தியையும் படிங்க… 

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி-சென்னைப் பல்கலைக் கழகம் அறிவிப்பு..!! 

இந்நிலையில், தனித்தேர்வர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலை கல்வி மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் லெனின்பாரதி கூறியதாவது: தனித்தேர்வர்கள், பதிவு செய்து, தேர்வு எழுதி, வெற்றி பெற்று, உயர்கல்வி பயில்கின்றனர். கொரோனா பரவல் உள்ளதால், தனித்தேர்வர்களுக்கு, தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.தனித் தேர்வர்களுக்கும், தேர்ச்சிக்கான சராசரி மதிப்பெண் நடைமுறையை உருவாக்க வேண்டும். அதன் வாயிலாக, அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment