கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : உயர்கல்வித்துறை அமைச்சர்..!!
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க…
சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-2022 கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். https:tngptc.in என்ற இணையத்தளம் மூலம் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 12 ஆம் வகுப்பு முடித்த CBSE மாணவர்களுக்கு ஜூலை 31ம் தேதிக்கு பின்னர் தான் மாணவர் சேர்க்கை துவங்கும் என கூறினார். உயர்நீதிமன்ற உத்தரவின் படி தனியார் கல்லூரிகளில் 75 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர் பொன்முடி, அதிக கட்டணம் வசூல் செய்யும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியையும் படிங்க…
B.Ed., M.Ed., பருவத்தேர்வுகள் – வரும் 28ம் தேதி துவக்கம்..!!