குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறிகள்; பலன்கள்..!! - Tamil Crowd (Health Care)

குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறிகள்; பலன்கள்..!!

 குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறிகள்; பலன்கள்..!!

காய்கறிகள் பெரும்பாலானவை குறைவான கலோரி கொண்டவை. அதே நேரத்தில் அதிக அளவில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. உடல் எடையைக் குறைக்க, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளையே பலரும் விரும்புகின்றனர். அப்படியான குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறிகளைப் பற்றிப் பார்ப்போம்!

காளிஃபிளவர்:

காளிஃபிளவர் மிகவும் குறைந்த கலோரி கொண்ட உணவாகும். அதை எண்ணெய்யில் பொரித்தெடுத்து சாப்பிடும்போதுதான் உடல் நலத்துக்கு கெடுதலாக மாறிவிடுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காளிஃபிளவரை வேக வைத்து அல்லது தணலில் வாட்டி சாப்பிடலாம். 100 கிராம் காலிஃபிளவரில் 5 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. மேலும் ஒரு நாள் தேவையில் 77 சதவிகித வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. VITAMIN  K-வும் அதிக அளவில் உள்ளது. இதனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

இந்த செய்தியும் படிங்க…

இதய நோய்(Heart Attack): இதயம் செயலிழக்க போகிறது என்பதற்கான முக்கிய அறிகுறிகள்..!! 

குடைமிளகாய் :

குடைமிளகாய் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய் ஆகும். ஒரு கப் குடைமிளகாயில் தோராயமாக 9 கிராம் அளவுக்குத்தான் கார்போஹைட்ரேட் உள்ளது. மூன்று கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 93 சதவிகிதம் அளவுக்கு VITAMIN A-வையும் 317 சதவிகிதம் அளவுக்கு VITAMIN C-யையும் அளிக்கிறது.

காளான்:

அசைவ உணவுக்கு இணையாக புரதச்சத்து கொண்டது காளான்கள். ஒரு கப் காளானில் தோராயமாக 2 கிராம் அளவுக்குத்தான் கார்போஹைட்ரேட் உள்ளது. இதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடண்ட், ஆன்டி-இன்ஃபிளமேட்டரி ரசாயனங்கள் உள்ளன.

வெள்ளரி:

உடலுக்கு நீர்ச்சத்தும் புத்துணர்வும் தரும் காய்கறி வெள்ளரி. ஒரு கப் வெள்ளரியில் வெறும் 4 கிராம் அளவுக்குத்தான் கார்போஹைட்ரேட் உள்ளது. இதில் வைட்டமின் இ உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.

தக்காளி:

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி தக்காளி. ஒரு கப் தக்காளியில் 6 கிராம் அளவுக்கு கார்போஹைட்ரேட் உள்ளது. தக்காளியில் VITAMIN A,C,K அதிக அளவில் உள்ளது. POTASSIUM நிறைவாக உள்ளது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். தக்காளியில் உள்ள லைக்கோபீன் என்ற ரசாயனம் சில வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும்.

 இந்த செய்தியும் படிங்க…

Cholesterol:குறைக்க எளிய வழிகள்..!!  

வெங்காயம்:

தினசரி உணவில் பயன்படுத்தும் மற்றொரு பொருளான வெங்காயமும் அதிக ஊட்டச்சத்து கொண்டது. 100 கிராம் வெங்காயத்தில் தோராயமாக 11 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. வெங்காயத்தில் உள்ள quercetin என்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க உதவுகிறது. இது தவிர உடல் எடை குறைக்க, பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்னை சரியாக, கெட்ட கொழுப்பு அளவு குறைய என வெங்காயத்தின் பலன்கள் அதிகம்!

முள்ளங்கி, கீரை, கத்தரிக்காய், பூண்டு, முட்டைகோஸ் உள்ளிட்டவையும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள காய்கறிகள்தான்!

Leave a Comment