குடைமிளகாய்-புற்றுநோயைத் தடுக்கும், கண் பார்வைத் திறனை மேம்படுத்தும்..!!
கேரட், பீன்ஸ் போன்று வெளிநாட்டில் இருந்து வந்து நம் நம்மை ஆக்கிரமித்த காய்கறிகளுள் ஒன்று குடைமிளகாய். காரம் குறைவான அதே நேரத்தில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என கண்களைக் கவரும் வகையில் கிடைக்கிறது குடைமிளகாய். சமைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை, சமைக்காமலேயே இதை சாப்பிட முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
இந்த செய்தியும் படிங்க…
கத்தரிக்காய்: தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும்..!!
100 கிராம் குடைமிளகாயில் வெறும் 31 கலோரிதான் உள்ளது. கார்போஹைட்ரேட் 6 கிராமும், கொழுப்பு 0.3 கிராமும், நார்ச்சத்து 2.1 கிராமும், வைட்டமின் சி 123 மி.கி, ஃபோலிக் அமிலம் 52 மி.கி, பீட்டா கரோட்டின் 328 மை.கி, வைட்டமின் ஏ 55 மை.கி அளவில் உள்ளன.
பச்சை மிளகாய் போல இது இதயத் துடிப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யாது. அதே நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் தூண்டி, உடல் எடை வேகமாக குறைய செய்யும்.
இதில் உள்ள வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். புண்களை ஆற்றும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் திறன் இதற்கு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமின்றி இனப்பெருக்க மண்டல உறுப்புக்களின் செயல்திறனையும் மேம்படுத்தும் திறன் கொண்டது. ரத்த செல்களின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கிறது.
இந்த செய்தியும் படிங்க…
அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள்..!!
இதில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைவாக உள்ளது. இது கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் வயோதிகம் காரணமாக கண்களில் ஏற்படும் பார்வைத் திறன் குறைபாட்டை தாமதப்படுத்துகிறது. கண் புரை நோய் வருவதைத் தாமதப்படுத்துகிறது.
இது புற்றுநோய் செல்களை அழிக்கும், செல்கள் அளவிலான வீக்கத்தைத் தடுக்கும் திறன் கொண்டது. இதன் காரணமாக தொடர்ந்து குடைமிளகாயைச் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. இதில் உள்ள சில வகையான என்சைம்கள் வயிறு இரைப்பை புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் ஆண்களுக்கு ஏற்படும் ப்ராஸ்டேட் புற்றுநோய், பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் சிறுநீர்ப்பை, கணைய புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஆற்றலுடன் செயல்படுகின்றன.