கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்..??-அமைச்சர் பதில்..!!
PLUS TWO மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க….
8 / 10 / 12th PASS:மாதம் ரூ.64,360 சம்பளத்தில்-MAZAGON நிறுவனத்தில் வேலை-2021..!!
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, கல்லூரியின் அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “கால்நடை மருத்துவக் கல்லூரியின் உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக யாரேனும் கோரிக்கை வைத்தால் அதை அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.