ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்-சமூகநல பாதுகாப்பு அமைச்சகம்..!!

 ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்-சமூகநல பாதுகாப்பு

 அமைச்சகம்..!!

60 வயதுக்கும் மேற்பட்டோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சமூகநல பாதுகாப்பு அமைச்சகம் ஓய்வூதியத் தொகையை உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சமூகநல பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்கள், விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சுமார் 59.45 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஓய்வூதியமானது பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.600இல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஓய்வூதியம் 3,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படும். அதன்பின் விவசாய நிலம் உட்பட மற்ற நிலங்களை சர்வே நடத்த ரூ.287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 ஆண்டுகளில் டிஜிட்டல் முறையில் வரைபடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment