எச்சரிக்கை:வாடிக்கையாளர் சேவை எண்களை GOOGLE -ல் தேட வேண்டாம்..!!

எச்சரிக்கை: வாடிக்கையாளர் சேவை எண்களை GOOGLE -ல் தேட வேண்டாம்..!!

எந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணையும் GOOGLE-ல் தேட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியும் படிங்க…  

PAN CARD தொலைந்தால் 5 நிமிடத்தில் பெறலாம்.! EASY STEPS ONLY..!!  

GOOGLE-ல் இவ்வாறு வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது, பெரும்பாலான தேடல் முடிவுகள் விளம்பரதாரர்களின் இணையப் பக்கங்களாகவே வருகின்றன. இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாகவும், சமீப காலமாக இது தொடர்பான மோசடிப் புகார்கள் அதிகளவில் காவல்துறையில் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, சில மோசடியாளர்கள் போலியான விளம்பரங்கள் மூலம், GOOGLE-ல் மக்கள் இதுபோன்று வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது தங்களது இணையப் பக்கங்கள் முதலில் வருவது போல செய்து விடுகிறார்கள். எனவே, முதலில் வரும் இந்த இணையப் பக்கத்துக்குள் நுழைந்து, தங்களுக்குத் தேவைப்படும் நிறுவனத்தின் சேவையைப் பெற முனையும் மக்கள், இந்த மோசடியாளர்களின் எண்களைத் தொடர்பு கொள்வது மோசடிக்கு வித்திடுகிறது.

இதுபோன்ற மோசடியாளர்கள் பெரும்பாலும் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள், தங்களை தொடர்பு கொள்ளும் அப்பாவி மக்களிடம் கிரெடிட் அல்லது டெபிட் அட்டையின் விவரங்களைப் பெற்று பணமோசடி செய்கிறார்கள்.

சில மோசடியாளர்கள், தங்களிடம் சிக்கும் நபர்களின் செல்லிடப்பேசியில் தானியங்கி செயலிகளைக் கூட பதிவேற்றி, அதனைக் கொண்டு வங்கி மோசடியை அரங்கேற்றுகிறார்கள்.

இந்த செய்தியும் படிங்க… 

PF கணக்கில் AADHAAR  இணைக்க SEPTEMBER  1-ந் தேதி வரை கால நீட்டிப்பு :மத்திய அரசு உத்தரவு..!!

எனவே, எந்த விதமான தகவல் குறித்தும் GOOGLE-ல் தேடும் போது, அதில் வரும் இணையப் பக்கங்களின் முன்பாக ஆங்கிலத்தில் ஏடி போன்ற எழுத்துக்கள் இருந்தால் அவற்றை தவிர்த்து விடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Comment