உள்ளாட்சி தேர்தல் எப்போது..?? – அனைத்து கட்சிகளுடன் Sep-6 ஆலோசனை: தேர்தல் ஆணையம்..!!

 உள்ளாட்சி தேர்தல் எப்போது..?? – அனைத்து கட்சிகளுடன் Sep-6 ஆலோசனை: தேர்தல் ஆணையம்..!!

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் வரும் 6ஆம் தேதி ஆலோசனை நடத்தவிருக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க…

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதல் இதற்கு தடை -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!! 

இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அனுப்பியுள்ள செய்தியில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 6ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்திமுடிக்க மேலும் சிறிது காலம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்திருக்கிறது. தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக வாக்காளர் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment