அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் -ஆன்லைன் அட்மிஷன் 2021..!!

 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் -ஆன்லைன் அட்மிஷன் 2021..!!

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுதும் நான்கு மகளிர் பாலிடெக்னிக் உடபட 58 அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இவற்றில் 19 ஆயிரத்து 840 இடங்களுக்கு டிப்ளமா இன்ஜினியரிங் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த படிப்புகளில் சேரலாம்.நடப்பு கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகளை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நேற்று துவக்கி வைத்தார்.

இந்த செய்தியையும் படிங்க….

BREAKING: PLUS TWO வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை: ஸ்டாலின் வெளியிட்டார்..!! 

முதலாமாண்டில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngptc.in என்ற இணையதளம் வழியே பதிவு செய்ய வேண்டும். பதிவுகள் 

  1. ஜூலை 20ல் துவங்கி ஆக. 4ல் முடியும்; 
  2. ஆகஸ்ட் 5 முதல் ஆக. 16க்குள் சான்றிதழ்களை ஆன்லைன் வழியே பதிவேற்ற வேண்டும்.

இணையதளத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவேற்றலாம். அந்தந்த அரசு கல்லுாரிகளிலும் நேரடியாக சென்று ஆன்லைன் வழியே பதிவேற்றலாம். 

இதற்காக மாநிலம் முழுதும் 54 இடங்களில் வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தாததால் அவர்கள் 9ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment