அதிக கொழுப்புள்ள உணவுகள் -பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்துமா..??

 அதிக கொழுப்புள்ள உணவுகள் -பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்துமா..?? 

நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவுகள் அல்லது எண்ணெயில் தயாரிக்கப்பட்ட குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட ஸ்னாக்ஸ்கள் மற்றும் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிக கொழுப்பு உணவுக்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு ஒன்றை சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதை தெரிந்து கொள்ளுங்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், அதிக கொழுப்புள்ள உணவுகள் குடல் மற்றும் பெருங்குடல் புற்று நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

 இந்த செய்தியும் படிங்க…

Cholesterol:குறைக்க எளிய வழிகள்..!!  

கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகள் குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் மூலக்கூறு அடுக்கை தூண்ட கூடிய வாய்ப்பு அதிகம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் ‘செல் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வெளியிடப்பட்டன. மோசமான சுகாதார விளைவுடன் இருக்கும் தொடர்புகள் மற்றும் அமெரிக்காவில் இறப்புக்கான சில முக்கிய காரணங்களான நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவை இருந்து வருவது உள்ளிட்டவற்றை சுட்டிக்கட்டி பல ஆண்டுகளாக மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்கள் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை வெகுவாக குறைத்து கொள்ளுமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கூற்றுப்படி, ரெட் மீல் போன்ற நிறைவுற்ற கொழுப்புகளில் காணப்படும் அதிகமான உணவு கூறுகள் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து காரணிகளாக கருதப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் தற்போது பின்பற்றி வரும் உணவுப் பழக்கவழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்தால் இந்த புற்றுநோய் பாதிப்பில் சுமார் 70 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். உணவு முறைகளை தவிர குடும்ப வரலாறு, அழற்சி குடல் நோய், புகைப்பழக்கம் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு ஆகியவை பிற அறியப்பட்ட புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளாக உள்ளன.

இந்த செய்தியும் படிங்க…

இதய நோய்(Heart Attack): இதயம் செயலிழக்க போகிறது என்பதற்கான முக்கிய அறிகுறிகள்..!! 

ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்சஸை சேர்ந்த உதவி பேராசிரியர் மியெகோ மனா கூறுகையில், பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக உள்ள உணவு பழக்கம் என்பது வாழ்க்கை முறை சார்ந்தது என்பதால் மக்கள் தங்களது உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்த எளிதானதாக இருக்கும். உடல் பருமன் மற்றும் அதிகரித்த கட்டி ஆபத்து ஆகியவற்றுக்கு இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதற்கான தொற்றுநோயியல் சான்றுகள் இருக்கின்றன என்றார்.

மனா மற்றும் அவரது குழு தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நிகழ்வுகளின் மூலக்கூறு அடுக்கைத் தூண்டுவது எப்படி என்பதை முன்னெப்போதையும் விட விரிவாக கூறி உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் மசிக்கப்பட்டு குடல் வழியே செல்லும் போது, ​​அவை குடலின் உட்புற மேற்பரப்புகளில் இருக்கும் குடல் ஸ்டெம் செல்கள் (ISC) உடன் தொடர்பு கொள்கின்றன. இந்த ISC-க்கள் கிரிப்ட்கள் எனப்படும் குடலின் தொடர்ச்சியாக மடிந்த பள்ளத்தில் வாழ்கின்றன. அதிக கொழுப்புள்ள உணவுகளுக்கு ஏற்றவாறு குடல் கட்டி உருவாவதை ஒருங்கிணைக்கும் மற்றும் புற்றுநோய் அபாயத்தை உயர்த்தும் நுழைவாயில் என்று ISC-க்கள் கருதப்படுகிறது என்று கூறினார் மியெகோ மனா.

இந்த செய்தியும் படிங்க…

உடலில் ஆக்சிஜன் அளவு – குறைவதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்..!! 

தொடர்ந்து பேசிய அவர், ISC-களுக்குள் அதிக கொழுப்பு சென்சார் மூலக்கூறுகள் உள்ளன. இவை உயிரணுக்களில் அதிக கொழுப்பு உணவின் அளவை உணர்ந்து செயல்படுகின்றன. ஆய்வில் அதிக கொழுப்பு உணவுக்கு ஏற்ப ஸ்டெம் செல்கள் தேவைப்படக்கூடிய வழிமுறைகளைப் பின் தொடந்த போது அங்கு peroxisome proliferator activated receptors கண்டறியப்பட்டதாக கூறினார்.இவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் வகையில் செல்லுலார் திட்டத்தை தூண்டுகின்றன என்றாலும், பல வகையான PPAR-க்கள் இருப்பதால் இது குறித்த சரியான வழிமுறைகள் தெளிவாக இல்லை.

இந்த ஆய்வின் போது சிறு குடல் மற்றும் பெருங்குடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தனித்தனி உயிரணுக்களிலிருந்து மூலக்கூறு வரிசைப்படுத்துதல், வெவ்வேறு வளர்சிதை மாற்றங்களின் அளவை அளவிட mass spectrometry மற்றும் கார்பன் ஓட்டத்தை அளவிட எரிபொருள் மூலங்களின் ரேடியோலேபிள் செய்யப்பட்ட ஐசோடோப்புகள் ஆகியவற்றை அறிய முடிந்தது. ஆய்வின் போது தங்களுக்கு முதலில் கிடைத்த பெரிய க்ளூ, வளர்சிதை மாற்ற பகுப்பாய்விலிருந்து கிடைத்ததாக மனா குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஐ.எஸ்.சி கிரிப்ட் செல்களில் காணப்படும் அதிக கொழுப்பு உணவு கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்ததை கண்டறிந்ததாக குறிப்பிட்டார். Cpt1a-ஐ அகற்றினால், குடல் ஸ்டெம் செல்களில் இந்த அதிக கொழுப்புள்ள உணவு பினோடைப்பைத் தவிர்ப்பீர்கள் என்று இதுபற்றி கூறிய மனா இந்த கட்டத்தில் நீங்கள் சாதாரண செல்கள் புற்றுநோய் உயிரணுக்களாக மாறும் டூமோரிஜெனெஸிஸ் (tumorigenesis) அபாயத்தை குறைக்கிறீர்கள் ஏமாறும் விளக்கம் அளித்துள்ளார்.

தங்களின் ஆராய்ச்சி தரவுகளாயின் மூலம் உணவில் இருந்து நோய் கட்டி உருவாகும் வரை புற்றுநோயின் வளர்ச்சியைக் கண்டறிய முடியும் என்றும் கூறியுள்ளார் மியெகோ மனா. சுருக்கமாக சொல்வதென்றால் கொழுப்புகள் ஃபிரீ ஃபேட்டி ஆசிட்களுக்கு உடைக்கப்பட்டு, பின் PPAR போன்ற சென்சார்களை தூண்டுகின்றன.இது கொழுப்பு அமிலங்களை உடைக்கக்கூடிய மரபணுக்களை இயக்குகின்றன.

உபரி இல்லாத கொழுப்பு அமிலங்கள் மைட்டோகாண்ட்ரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அவை ஸ்டெம் செல்களுக்கு உணவளிக்க அதிக ஆற்றலை உருவாக்க ஆக்ஸிஜனேற்றத்தால் அவற்றை எரிக்கலாம்.குடல் திசுக்களை பெருக்கி, வளர்த்து, மீண்டும் உருவாக்குகிறது. ஆனால் ஐ.எஸ்.சி எண்கள் விரிவாக்கப்படும்போது, ​​பிறழ்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த செய்தியும் படிங்க…

உடல் எடையை குறைக்க – எளிய வழிமுறைகள் !!  

சீரற்ற பிறழ்வுகள் பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும். கட்டுப்பாட்டு நிலையில் ஒப்பிடும் போது அதிக கொழுப்பு உணவை உட்கொள்வதன் காரணமாக tumorigenesis-ஸை துரிதப்படுத்துவதன் மூலம், இறப்பும் வியத்தகு முறையில் துரிதப்படுத்துவதை மனாவின் குழு கண்டறிந்ததுள்ளது. அதிக கொழுப்பு உணவு மாதிரிகளுடன் இன்னும் தொடர்ந்து ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும், மனிதர்களில் பெருங்குடல் புற்றுநோயை அகற்றுவது அல்லது தடுப்பதே தங்களது ஆராய்ச்சியின் குறிக்கோள் என்றும் கூறி உள்ளார் மியெகோ.

Leave a Comment