XE வகை கொரோனா-அறிகுறிகள்..?? - Tamil Crowd (Health Care)

XE வகை கொரோனா-அறிகுறிகள்..??

XE வகை கொரோனா-அறிகுறிகள் என்ன..??

XE வகை கொரோனா-அறிகுறிகள்

ஓமிக்ரானில் மொத்தமாக மூன்று உட்பிரிவு உள்ளது. அவை BA.1, BA.2, மற்றும் BA.3. இதில் இந்தியாவில் BA.1 பரவி வந்தது. ஓமிக்ரான் BA.2 என்பதுதான் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும். இந்த முதல் இரண்டு வகையும் இணைந்து உருவான குழந்தைதான் XE கொரோனா. இந்த XE கொரோனா 10 சதவிகிதம் வேகமாக ஓமிக்ரானை விட பரவ கூடியது என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

XE கொரோனா முதல் முறையாக யுகேவில் கடந்த ஜனவரி 19ம் தேதியே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 600 கேஸ்கள் இதுவரை அங்கு XE கொரோனா மூலம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் XD, XE மற்றும் XF மூன்று வகையான கலப்பு கொரோனா உள்ளன. 

இதில் XD என்பது டெல்டா, ஓமிக்ரானின் BA.1 சேர்ந்து உருவானது. இதுவும் கூட பிரான்ஸ் போன்ற நாடுகளில் பரவி வருகிறது. 

மூன்றாவது வகையான XF என்பது டெல்டா, ஓமிக்ரானின் BA.2 இணைந்து உருவானது. இது பிரிட்டனில் சில இடங்களில் பரவுகிறது.

XE கொரோனா அறிகுறிகள் 

அறிகுறிகள் வேக்சினை பொறுத்து  மாறலாம்.

  • காய்ச்சல், 
  • இருமல், 
  • வறண்ட தொண்டை, 
  • சளி, 
  • தோல் அரிப்பு, 
  • முகம் நிறம் மாறுதல் 

ஆகியவை அடிப்படையான அறிகுறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment