Weight loss Tips: அச்சமில்லாமல் அரிசி உணவை சாப்பிடலாம்..??
சமீப காலங்களில், அதிக அளவில் அரிசி சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. அதுவும் அரிசியே பிரதான உணவாக இருக்கும் இந்தியாவின் தென் மாநிலங்களில் இப்படிப்பட்ட கருத்தால், அரிசி சாப்பிடுவதா? வேண்டாமா? என்ற குழப்பமும் உள்ளது.
இந்த செய்தியும் படிங்க…
உடல் எடையை குறைக்க – எளிய வழிமுறைகள் !!
அரிசியை சிலர் ஆரோக்கியமற்றது என்றும் எடை அதிகரிப்பதற்கான காரணம் என்றும் கருதுகின்றனர். உடல் பருமன் குறித்த பயத்தால் பெரும்பாலான மக்கள் அரிசி சாப்பிடுவதில்லை. அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. நீங்கள் உணவில் அதிகமான கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொண்டால், உங்கள் எடை மற்றும் சர்க்கரை இரண்டும் அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, பருமனான மக்கள் குறைந்த அரிசி சாப்பிட வேண்டும்.
இந்தியாவில், அரிசியைக் கொண்டு பல வித உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. நீங்கள் உங்கள் உணவில் சிறிய அளவில் அரிசியை உட்கொண்டால் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது உங்கள் எடையை அதிகரிக்காது.
இந்த செய்தியும் படிங்க…
“DO NOT SKIP YOUR BREAKFAST – காலை உணவை தவிர்க்காதீர்கள்”..!!
அரிசியை இந்த வழியில் சமைத்து சாப்பிடுங்கள்:
1) முதலில் அரிசியை நன்கு களைய வேண்டும். பின்னர் அதை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற விடவும்.
2 )எந்த பாத்திரத்தில் அரிசியை சமைக்கப்போகிறீர்களோ, அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை (Coconut Oil) விடவும்.
3 )இதற்குப் பிறகு, அரிசியை சுமார் 1 நிமிடம் எண்ணெயில் வறுக்கவும்.
4 )இப்போது அரிசிக்கு தேவையான தண்ணீரை சேர்த்து குக்கரை மூடி மிகக் குறைந்த தீயில் சமைக்கவும்.
5 )அரிசி முழுமையாக தயார் ஆன பிறகு, அதை ஆற விடவும். அதன் பிறகு சமைக்கப்பட்ட சாதத்தை 12 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
6 )12 மணி நேரம் கழித்து, அரிசியை வெளியே எடுத்து அப்படியே அல்லது மீண்டும் சுட வைத்து உட்கொள்ளலாம்.
இந்த செய்தியும் படிங்க…
உடல் வெப்பத்தைத் தணிக்கும் -உணவுகள்..!!
இந்த வழியில் அரிசியை சமைப்பதன் மூலம், அதில் உள்ள கலோரிகளில் 50% -60% குறைகிறது என்று இலங்கை விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது உங்கள் உடல் எடை அதிகரிக்கும் அபாயத்தை கணிசமாக குறைக்கிறது. இதில் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வழியில் சமைத்த அரிசியை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்று இந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.