WBC அதிகப்படுத்தி, நோய்த்தொற்றில் இருந்து நுரையீரலை காக்க..!! - Tamil Crowd (Health Care)

WBC அதிகப்படுத்தி, நோய்த்தொற்றில் இருந்து நுரையீரலை காக்க..!!

 WBC அதிகப்படுத்தி, நோய்த்தொற்றில் இருந்து நுரையீரலை காக்க..!!

எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படும் இரத்த வெள்ளையணுக்களின் WBC முக்கிய பணியே நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவளித்து, பாக்டீரியாக்கள் மற்றும் இதர நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவது தான். 

உடலில் WBC அளவு:

ஒருவரது உடலில் இரத்த வெள்ளையணுக்களானது WBC ஒரு மைக்ரோலிட்டர் இரத்தத்தில் சராசரியாக 4,500 முதல் 10,000 வரை இருக்கும். எப்போது இந்த அளவுக்கு குறைவாக இரத்த வெள்ளையணுக்கள் WBC உள்ளதோ, அப்போது அடிக்கடி உடல்நல குறைவால் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும்.

இந்த செய்தியையும் படிங்க…

 சோம்பு(Fennel Seeds), பெருஞ்சீரகம்- பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்..!!  

உடலில் இரத்த வெள்ளையணுக்களின் WBC அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.

சிட்ரஸ் பழ வகைகள்:

வைட்டமின் சி Vit C, இரத்த வெள்ளையணுக்களின் WBC உற்பத்தியை அதிகரிக்கும். எனவே சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த ஆரஞ்சு Orange, எலுமிச்சை Lime, சாத்துக்குடி, கிரேப்ஃபுரூட் Grapes போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். இதனால் இரத்த வெள்ளையணுக்களின் WBC அளவு அதிகரிக்கும். 

சிவப்பு குடைமிளகாய்:

  1. சிவப்பு குடைமிளகாயில் சிட்ரஸ் பழங்களை விட 2 மடங்கு அதிகமாக வைட்டமின் சி  Vit  Cநிறைந்துள்ளது. 
  2.  இதில் பீட்டா கரோட்டீனும் வளமான அளவில் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதுடன், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும் உதவும். 
  3. முக்கியமாக இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்களுக்கு மிகவும் நல்லது.

ப்ராக்கோலி(Broccoli):

  1. ப்ராக்கோலிBroccoli யில் வைட்டமின்கள் (Vitamins & Minerals) மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் அடங்கியுள்ளது.
  2.  இதில் வைட்டமின்(Vitamin A,C, E) ஏ, சி மற்றும் ஈ-யுடன், பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.
  3.  இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

பீட்ரூட்(Beet Root):

  1. பீட்ரூட் Beet Root ல் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த வெள்ளை அணுக்களை WBC அதிகரிக்கும் புரோட்டீன்Protein இருக்கிறது.
  2.  மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுப் பொருள். 
  3. ஆகவே இதனை டயட்டில் இருப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் வெள்ளை அணுக்களும் WBC அதிகரிக்கும். 
  4. அதிலும் பீட்ரூட் Beet Root ன் இலைகளில் வைட்டமின் ஏ(Vit A)-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி(Vit C)-யும் இருக்கின்றன.
இந்த செய்தியையும் படிங்க…

பேரிட்சை பழம்(Dates):

  1. பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து(iron) ஏராளமாக உள்ளது. 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள், 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது.
  2.  இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். 
  3. வைட்டமின்Vitamins மற்றும் மினரல் Minerals நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். 
  4. மேலும் இது உடலில உள்ள இரத்த சிவப்பணுக்கள்RBC மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும். 
  5. உலர்ந்த முந்திரிப்பழம், பேரீட்சை பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது.

Leave a Comment