UNO., பொதுச்சபை தலைவராக -மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் : தேர்வு..!!
UNO: ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபை(UNO)யின் 75-வது தலைவராக துர்மெனிஸ்தான் நாட்டின் வோல்கன் போஸ்கிர் உள்ளார்.
இவரது பதவிக்காலத்திற்கு பிறகு புதிய தலைவரை தேர்வு செய்ய ஓட்டெடுப்பு நடந்தது. இதில் மாலத்தீவுகள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித், ஆப்கானிஸ்தான் வெளியுற அமைச்சர் ஜல்மய் ரசூல் என்பவரும் போட்டியிட்டனர். 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் 191 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர்.
இந்த செய்தியையும் படிங்க…
வால்நட்டில் WALNUT அடங்கியுள்ள ஊட்டசத்துக்களும் , மருத்துவ பயன்களும்..!!
இதில் அப்துல்லா ஷாகித்திற்கு 143 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து UNO பொதுச்சபையின் 76-வது தலைவராக தேர்வு பெற்றார். வரும் Septemberல் 76-வது பொதுச்சபை கூட்டம் நடக்கிறதுா ஷாகித் துவக்கி வைப்பார். இந்தியா உள்பட உறுப்பினர் நாடுகளின் ஐ.நா., தூதர்கள் அப்துல்லா ஷாகிப்பிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.