TRB கலைப்பா? – பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்..!!
TRB கலைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் TRB பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. இதுதவிர, நீதிமன்றங்களிலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த செய்தியையும் படிங்க…
FLASH NEWS- தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு.!!
இந்நிலையில், TEACHERS RECRUITMENT BOARD கலைத்துவிட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் பணி நியமனங்களை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. TRB கலைக்கும் முயற்சியை அரசுகைவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் உட்பட சிலர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளிடம் கேட்டபோது, ”TRB கலைக்கப்படுவதாகவும், அதை TNPSC-ன் இணைக்க முடிவு செய்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் கற்பனையானவை. அத்தகைய திட்டங்கள் ஏதும்அரசிடம் இல்லை. அதற்கு மாறாக, இந்த துறையை சீரமைப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றனர்.