TRB- கலைக்கும் எண்ணம் எதுவும் இல்லை : அமைச்சா்..!!
ஆசிரியா் தேர்வு வாரியம் (TRB) கலைக்கப்படாது என்று அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
இதுகுறித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது:
ஆசிரியா் தேர்வு வாரியம் (TRB)கலைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. செய்திக் குறிப்பை அனுப்பவில்லை. ஊடகங்களில் வெளியான சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலா் கருத்துத் தெரிவித்தனா். அனுமானத்தின் அடிப்படையில்தான் இந்த செய்தி வெளியாகி இருக்கக்கூடும். பள்ளிக் கல்வித்துறைக்கு அத்தகைய எண்ணம் எதுவும் இல்லை. எனினும் தேர்வு வாரியத்தை (TRB)மறு கட்டமைப்பு செய்யும் எண்ணம் உள்ளது.
இந்தச் செய்தியையும் படிங்க…
எதிர்க்கட்சி துணைத் தலைவராக OPS, கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்வு..!!
அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறித்த விவரத்தை விரைவில் தெரிவிக்கிறோம். ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறையிடம் அனுமதி கோரி அனுப்பப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் நிலுவையில் இருந்தால், அவற்றைப் பரிசோதித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.