TNPSC,TRB,VAO.GROUP EXAMS-இந்திய அரசியலமைப்பு – குடியுரிமை. - Tamil Crowd (Health Care)

TNPSC,TRB,VAO.GROUP EXAMS-இந்திய அரசியலமைப்பு – குடியுரிமை.

TNPSC,TRB,VAO.GROUP EXAMS-இந்திய அரசியலமைப்பு – குடியுரிமை.

இந்திய அரசியலமைப்பு –CLICK HERE

இந்திய அரசியலமைப்பு – குடியுரிமை

குடியுரிமை

குடியுரிமை என்பது ஒரு நாட்டில் குடியிருக்கும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமையாகும். குடியுரிமைஎன்ற சொல்லுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் வரையறை தரப்படவில்லை. இந்திய மக்கள் குடிமக்கள் மற்றும் அயல்நாட்டவர் (alien) என்று இருவகைப்படுத்தப்படுவர். குடிமக்கள் நாட்டன் முழுமையான அங்கத்தினர் ஆவர். அவர்கள் முழுமையான குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைப் பெறுகிறார்கள். பிறநாட்டவர்களுக்கு (aliens) அவ்வுரிமைகள் கிடைக்காது.

அரசியலமைப்பும் குடியுரிமையும்

இந்தியா ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கொண்ட கூட்டாட்சியாக (கநனநசயட) இருந்தாலும், ஒரேயொரு குடியுரிமையே (ளுiபெடந உவைணைநளொip) அரசியலமைப்பால் அளிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கான தனிக் குடியுரிமை வழங்கப்படுவதில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5 முதல் 10 வரையிலான பிரிவுகள் குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை அளிக்கிறது.

இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் தொடங்கும்போது குடியுரிமை குறித்த சட்ட வகைமுறைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டமும், அரசியலமைப்பு தொடங்கிய பின்னர் குடியுரிமை குறித்த வகைமுறைகளை 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டமும் விளக்குகின்றன.

ஒற்றைக் குடியுரிமை

இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சியுடன் கூடிய இரட்டை அரசை (மத்திய மற்றும் மாநிலங்கள்) கொண்டிருந்தாலும் ஒற்றைக் குடியுரிமையைக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு என்று தனி குடியுரிமை இல்லை.

ஜனவரி, 1950-இல் எவரெல்லாம் இந்தியக் குடிமக்கள் என்பதனை இந்திய அரசியலமைப்பு விளக்குகிறது.

உறைவிடம் மூலம் குடியுரிமையைப் பெறுதல் (பிரிவு 5)

இதன்படி இந்தியாவை உறைவிடமாகக் கொண்ட எவரும் பின்வரும் நிலைப்பாட்டில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருந்தாலும் அவர் இந்தியக் குடிமகனாவார்.

அவர் இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும் (அல்லது)

அவருடைய பெற்றோரில் எவரேனும் ஒருவர் (தாய் அல்லது தந்தை) இந்தியாவில் பிறந்தவராக இருக்க வேண்டும் (அல்லது)

இந்திய அரசியலமைப்பு தொடங்கும் முன்னர் அவர் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.

குடிபெயர்தல் மூலம் குடியுரிமை பெறுதல் (பிரிவு 6)

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் (பிரிவு 6). இதன்படி பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்து இந்தியாவில் நிரந்தரமாக தங்க வந்தவர்களும் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் இந்தியக் குடிமக்களாகவே கருதப்படுவார்கள்.

அவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ அல்லது அவர்களின் பெற்றோரின் பெற்றோர்களில் ஒருவரோ 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மற்றும்

அவர்கள்07.1948-ஆம் தேதிக்கு முன்னர் குடிபெயர்ந்து வந்தவர்களாக இருப்பின்,அவர்கள் அவ்வாறு குடிபெயர்ந்து வந்த தேதி முதல் இந்தியாவில் வழக்கமாக குடிபெயர்ந்து வந்தவராக கருதப்படும்.

அவர்கள் 07.1948-ஆம் தேதிக்கு பின்னர் குடிபெயர்ந்து வந்தவர்களாக இருப்பின், அவர்கள் இந்தியக் குடிமக்கள் ஆவதற்குரிய பதிவை அதற்கென இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரிடம் செய்து கொண்டிருக்க வேண்டும். மேலும், அப்பதிவை செய்து கொள்வதற்கு முந்திய குறைந்த பட்ச காலமான ஆறுமாத காலமாவது அவர்கள் இந்தியாவிலேயே குடியிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றவர்கள் (பிரிவு 7)

இப்பிரிவின்படி 3.1947-ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றவர்கள் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படமாட்டார்கள்

எனினும், அவ்வாறு பாகிஸ்தான் சென்றவர்கள் மறு குடியமர்வுக்காக அல்லது நிலையாகத் திரும்பி விடுவதற்காக வழங்கப்பட்ட ஓர் அனுமதிச் சீட்டின் கீழ் இந்தியாவிற்கு திரும்பி வந்துவிட்டால் அவர்கள் 7.1948-ஆம் தேதிக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்களாகவும், இந்தியக் குடிமக்களாகவும் கருதப்படுவர்.

பதிவு செய்து கொள்ளல் மூலம் குடியுரிமை பெறுதல் (பிரிவு 8)

இப்பிரிவு, இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வாழ்பவர்கள், இந்தியக் குடியுரிமையைப் பெறல் குறித்துக் கூறுகிறது.

இதன்படி ஒருவர் தாமோ அல்லது தம் பெற்றோரில் ஒருவரோ அல்லது தம் பெற்றோரின் பெற்றோரில் ஒருவரோ 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவில் பிறந்திருந்து அவர் இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள வெளிநாடு எதிலும் வழக்கமாக குடியிருந்து வருபவராக இருந்தால் இந்தியக் குடிமகனாகவே கருதப்படுவார்.

ஆனால் அவர் பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்தல் வேண்டும். அதாவது அவர் அப்போதைக்கு குடியிருந்து வரும் நாட்டில் உள்ள இந்தியத் தூதுவர் அல்லது வணிக முகவரிடம் உhயி நடைமுறைகளின்படி விண்ணப்பம் செய்து, தம்மை ஒரு இந்தியப் குடிமகனாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தியக் குடியுரிமையை இழத்தல் (பிரிவு 9)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடங்குவதற்கு முன்பு (ஜனவரி 26, 1950) ஓர் இந்தியக் குடிமகன் தன்னிச்சையாக ஒரு வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்றால் அவன் இந்தியக் குடியுரிமையை இழந்தவனாகிறான்.

குடியுரிமையைத் தொடர்தல் (பிரிவு 10)

பிரிவு 5 முதல் 8 வரையிலான பிரிவுகளின் கீழ் இந்தியக் குடிமக்களாகும் ஒவ்வொருவரும் தொடர்ந்து இந்தியக் குடிமக்களாகவே இருப்பர் என பிரிவு 10 கூறுகிறது. ஆனால், அவர்களது குடியுரிமையை பாராளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றுவதன் வாயிலாக இழக்கச் செய்யலாம்.

குடியுரிமையை ஒழுங்குபடுத்த பாராளுமன்றத்திற்குள்ள சட்டமியற்றும் அதிகாரம் (பிரிவு 11)

பாராளுமன்றம் சட்டமொன்றை இயற்றி குடியுரிமையை ஒழுங்குபடுத்தலாம் என பிரிவு 11 அதிகாரமளிக்கிறது. இதன்படி 1955-ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை பாராளுமன்றம் இயற்றியது. இச்சட்டம், இந்திய அரசியலமைப்பு தொடங்கப்பட்ட பின்னர் குடியுரிமையை அடைதல் மற்றும் இழத்தல் குறித்துக் கூறுகிறது.

மேற்கண்ட சட்டம் கீழ்கண்ட நான்கு ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டம், 1986

குடியுரிமை திருத்தச் சட்டம், 1992

குடியுரிமை திருத்தச் சட்டம், 2003

குடியுரிமை திருத்தச் சட்டம், 2005

தொடக்கத்தில் குடியுரிமைச் சட்டம், 1955 காமன்வெல்த் குடியுரிமையையும் தன்னுள் கொண்டிருந்தது. 2003 திருத்தச் சட்டம் மூலம் நீக்கப்பட்டது.

குடியுரிமை அடைதல்

இந்தியக் குடியுரிமையை

1. பிறப்பால்

2.மரபு வழித் தோன்றலினால்

3. பதிவு மூலம்

4.வெளிநாட்டவர் தன்னை குடிமகனாகக் கோரல்

5. புதிய பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலம் பெறலாம்.

குடியுரிமையின் முடிவு

1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் கீழ் குடியுரிமையானது

அ. துறத்தல்

ஆ.பறித்தல் மற்றும்

இ.பிறநாட்டின் குடியுரிமையைப் பெறல் முதலிய காரணங்களால் முடிவுறலாம் அல்லது இழக்கப்படலாம்.

Leave a Comment