TNPSC,TRB, VAO EXAM- புவியியல் முழுத்தொகுப்பு,மாநகராட்சியின் பணிகள். - Tamil Crowd (Health Care)

TNPSC,TRB, VAO EXAM- புவியியல் முழுத்தொகுப்பு,மாநகராட்சியின் பணிகள்.

TNPSC,TRB, VAO EXAM- புவியியல் முழுத்தொகுப்பு – தமிழ்நாடு அரசு வெளியீடு,மாநகராட்சியின் பணிகள்!

TNPSC,TRB, VAO EXAM- புவியியல் முழுத்தொகுப்பு – தமிழ்நாடு அரசு வெளியீடு!

புவியியல் முழுத்தொகுப்பு – தமிழ்நாடு அரசு வெளியீடு-CLICK HERE

மாநகராட்சியின் பணிகளைப் பற்றிய குறிப்புகள்!

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போன்று நகராட்சி அமைப்புகள் சுயாட்சி அரசாங்க நிறுவனங்களாகச் செயல்பட வேண்டியுள்ளன , பொருளாதார மேம்பாடு மற்றும் சமுதாய நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களைத் தயாரிக்கும் பொறுப்பினை அவை பெற்றுள்ளன .

பன்னிரண்டாவது இணைப்புப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள 18 அம்சங்கள் குறித்து பணிகளை மேற்கொள்வதோடு செயல் திட்டங்களையும் அவை நிறைவேற்ற வேண்டியுள்ளது .

இதன்படி , மாநிலச் சட்டமன்றத்தின் சட்டங்களால் பின்வரும் பணிகள் நகராட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் .

நகர திட்டமிடலுடன் ஊரகத் திட்டத்தையும் தீட்டுதல் .

கட்டடங்கள் கட்டுதல் மற்றும் நிலத்தைப் பயன்படுத்துதல்  அவற்றை ஒழுங்குமுறைப்படுத்துதல்.

பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்குத் திட்டமிடுதல்.

 சாலைகள் மற்றும் பாலங்கள் ஆகியவற்றைப் போர்க்கால அடிப்படையில் பராமரித்தல் .

குடிநீர் விநியோகம் செய்தல்.

பொதுச்சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளுதல்.

தீயனைப்புப் படை ( பணிகள் )

ஊரகக்காடு மற்றும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் .

ஊனமுற்றோர் மற்றும் சிந்தை மந்தமுற்றோர் ஆகியோரை உள்ளடக்கிய , சமுதாயத்தின் நலியுற்ற வகுப்பினரின் நலன்கள் பாதுகாத்தல் .

சேரி முன்னேற்றம் செய்தல்,ஊரக வறுமை நீக்கம் செய்தல் ,கல்வி மற்றும் கலாச்சார அம்சங்களின் வளர்ச்சிக்கு பாடுபடுதல் .

பூங்காக்கள் , தோட்டங்கள் , விளையாட்டு மைதானங்கள் போன்ற நகரப்புற வசதிகளுக்கு ஏற்பாடு செய்தல் .

இடுகாடு மற்றும் சுடுகாடு மைதானங்கள் பராமரித்தல்.

கால்நடைக் குட்டைகளை அமைத்தல் மற்றும் மிருக வதையைத் தடை செய்தல்.

பிறப்பு , இறப்பு ஆகியவற்றின் பதிவுடன் கூடிய மிக முக்கியமான புள்ளி விவரங்களைத் திரட்டல் .

பேருந்து நிறுத்துமிடங்கள் . கழிவறை , சாலை விளக்கு போன்ற பொது வசதிகளைச் செய்து கொடுத்தல்.

இறைச்சிக் கொட்டில்கள் ,தோல் பதனிடல் ஆகியவற்றை ஒழுங்குமுறைப்படுத்துதல்.

மேற்கண்ட அம்சங்கள் சம்பந்தமாக , மாநாகராட்சியையும் உட்கொண்ட நகராட்சி அமைப்புகள் அனைத்தும் பல பணிகளை ஆற்றுகின்றன .

இவற்றோடு , தோப்பு பண்ணை மற்றும் சாலையோர மரங்கள் ஆகியவற்றை கவனித்தல் , உடைமையாளர் இல்லாத நாய்கள் , சுற்றித் திரியும் பன்றிகள் மற்றும் தொந்தரவளிக்கும் விலங்குகளைத் தடுப்புக்காவல் வைத்தல் அல்லது கொன்று அழித்தல்.

சுற்றுலாக்களையும் , கண்காட்சிகளையும் அமைத்து மேலாண்மை செய்தல் போன்ற தன் விருப்பப் பணிகள் சிலவற்றையும் அவை செயலாற்றுகின்றன.

Leave a Comment