TNPSC,TRB, TET, VAO- INDIAN POLITY (G/K)Q/A-அரசியலமைப்பு சட்ட திருத்தம் 73 மற்றும் 74 பற்றி விரிவான விளக்கம்
INDIAN POLITY Questions and Answers–CLICK HERE
அரசியலமைப்பு சட்ட திருத்தம் 73 மற்றும் 74 பற்றி விரிவான விளக்கம்
அரசியலமைப்பின் 73 வது மற்றும்
74 வது திருத்தங்கள் 1992 ம் ஆண்டு டிசம்பர் திங்களில் இயற்றப்பட்டன .
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24ம் நாள் முதல் இத்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன .
அவை , பஞ்சாயத்துக்களையும் , நகராட்சி அமைப்புகளையும் அரசியலமைப்பு முறைமைகளாக்கி உள்ளன .
சுயாட்சி அரசாங்க நிறுவனங்களாக செயல்படும் ஆணையுரிமைகளையும் . உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் பொருட்டும் , 7வது மற்றும் 74 வது திருத்தங்கள் மாநில சட்டமன்றங்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளன .
பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவற்றுக்கான திட்டங்களைத் தயாரித்தல் , அரசியலமைப்பின் 11 மற்றும் 12 வது இணைப்பு பட்டியல்களில் கண்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய நீதி பற்றிய திட்டங்களை நிறைவேற்றுதல் ஆகிய கடும் பணிகள் அவைகளிடம் ஒப்படைவு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விணைப்புப் பட்டியல்கள் ஒரு புறம் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கும் இடையே அதிகார பகிர்வினை செய்துள்ளன .
73 வது திருத்தத்தின் கீழ் 1வது இணைப்புப் பட்டியல் 29 வகை அதிகாரங்களைக் கொண்டுள்ளது . அவற்றின் மீது முழுமையான அதிகாரத்தைப் பஞ்சாயத்துக்கள் பெற்றுள்ளன .
12 வது இணைப்புப் பட்டியல் 18 வகை அதிகாரங்களை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கென கொண்டுள்ளது . இவை அவற்றின் சம்பந்தப்பட்ட பணிகளையும் சுட்டி காட்டுனகின்றன .
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம சபைக்கும் மற்றும் கிராமம் பஞ்சாயத்து மாராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிலைகளில் பஞ்சாயத்துகள் அமையப் பெறவும் 73 வது திருத்தம் வகை செய்கின்றது .
நகர்பாலிக் சட்டம் என்று அறியப்படும் 74 வது திருத்தம் மூன்று வகையான நகராட்சி அமைப்புகள் அமையப் பெறுவதற்கு வகைசெய்கின்றது .
அவை , நகர பஞ்சாயத்துக்கள் ,நகராட்சி மன்றம் மற்றும் மாநகராட்சி மன்றங்கள் என்பவையாகும் .
ஒரு கிராமப்புற எல்லையிலிருந்து நகர்ப்புற எல்லைக்கும் இடம்பெயர்வான பகுதிக்கு ஒரு நகர பஞ்சாயத்து அமைக்கப்படுகிறது .
நகராட்சி மன்றங்கள் சிறிய நகர்ப்புறப் பகுதிகளுக்கும் . பெரிய நகர்ப்புறப் பகுதிகளுக்கும் மாநாகராட்சி மன்றங்களும் நிறுவப்படுகின்றன .
73 வது மற்றுமம் 74 வது திருத்தங்களால் உருவாக்கப்பட்டுள்ள புதிய முறையின் முக்கியமான மற்றும் பொதுவான அம்சங்கள் பின்வருமாறு ,
சீரான ஐந்தாண்டுப் பதவிக்காலத்துடன் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கு நேர்முகத் தேர்தல் நடத்துதல் .
தாழ்த்தப்பட்ட சாதியாளர் . மலைவாழ் குடியினர் , பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கென இட ஒதுக்கீடு செய்தல் .
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்தல் .
பெண்டிர்களுக்கு மூன்றில் ஒரு பங்குக்கு குறைவில்லாத இடஒதுக்கீடு செய்தல் .
மேற்சொல்லப்பட்டபடி , தலைவர்களுக்குரிய பதவிகளுக்கு இணையான ஒதுக்கீடு செய்தல்.
உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல்களை நடத்துவதற்கென ஒரு தேர்தல் ஆணையம் ஏற்படுத்துதல் .
இந்நிறுவனங்களின் நிதி வலிமையை உறுதி செய்யுயம் பொருட்டு ஒரு நிதி ஆணையம் அமைக்கப்படல் , இந்த ஆணையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்தல் வேண்டும் . ( உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளைத் தணிக்கை செய்வதற்கென ஏற்பாடு செய்தல்)
ஏதேனும் உள்ளாட்சி அமைப்பு கலைக்கப்படுமேயானால் , ஆறுமாத காலத்திற்குள் கட்டாயமாகத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு செய்தல் .
கட்சி வேட்பாளர்களாகவோ அல்லது சுயேட்சை நபர்களாகவோ உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடலாம் .