GROUP 2, 2 A, GROUP 4 உட்பட 38 அரசு தேர்வுகளுக்கான அறிவிப்பு நாளை எடுக்கப்படும்..??
GROUP 2, 2 A, GROUP 4 உட்பட 38 தேர்வுகள் எப்போது என்ற முடிவு நாளை எடுக்கப்படும் என TNPSC தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் வைக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2 வருடமாக கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
TNPSC ஆலோசனை :
சில தேர்வுகளுக்கான அறிவிப்புகள் எப்போது வேண்டுமென்றாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், GROUP 2, 2 A, GROUP 4 உட்பட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்துவது? என TNPSC ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என கூறப்படுகிறது.
நாளை வெளியாகும்:
இது தொடர்பான முடிவுகள் நாளை வெளியாகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்து நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசு பணியிடங்களுக்கான தேர்வுகள் எழுத காத்திருந்த பலரும் தேர்வு அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.