TNPSC, VAO Exam தமிழில் முழு மதிப்பெண் பெற : மொழி இலக்கண நூல்கள், பொருள் இலக்கண நூல்கள்; - Tamil Crowd (Health Care)

TNPSC, VAO Exam தமிழில் முழு மதிப்பெண் பெற : மொழி இலக்கண நூல்கள், பொருள் இலக்கண நூல்கள்;

மொழி இலக்கண நூல்கள், பொருள் இலக்கண நூல்கள்


மொழி இலக்கண நூல்கள்

1)நூற்பெயர்:வீரசோழியம்

ஆசிரியர்:புத்தமித்திரர், புத்தசமயம்

காலம் கி.பி:11 -ம்  நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:எழுத்து சொல் பொருள் யாப்பு அணி பற்றிக் கூறும் ஐந்திலக்கண நூல்.

        காரிகை யாப்பில் இயற்றப்பட்டது.

       வடமொழி.

2)நூற்பெயர்:இலக்கண விளக்கம்

ஆசிரியர்:வைத்தியநாத தேசிகர், சைவர்

காலம் கி.பி:17-ம்நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:எழுத்து சொல் பொருள் யாப்பு அணி பற்றிக் கூறும் நூல்.

       குட்டித் தொல்காப்பியம். 941 நூற்பாக்கள்

        ஆசிரியரே உரை எழுதியுள்ளார்.

3)நூற்பெயர்: தொன்னூல் விளக்கம்.

ஆசிரியர்:வீரமாமுனிவர், கிறித்துவர்

காலம் கி.பி:18-ம் நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:ஐந்திலக்கண நூல், 370 நூற்பாக்கள்

4)நூற்பெயர்:முத்துவீர உபாத்தியாயர், சைவர்

ஆசிரியர்:18-ம் நூற்றாண்டு

காலம் கி.பி:18-ம் நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:ஐந்திலக்கண நூல், 15 இயல்கள், 1288 நூற்பாக்கள்

5)நூற்பெயர்:சுவாமிநாதம்

ஆசிரியர்:சுவாமிநாத கவிராயர்,சைவர்

காலம் கி.பி:19-ம் நூற்றாண்டு 

நூல் பொருள் முதலியன:ஐந்திலக்கண நூல், 15 மரபுகள், 201 நூற்பாக்கள்

6)நூற்பெயர்:அறுவகை இலக்கணம்

ஆசிரியர்:வண்ணச்சரபம், தண்டபாணி சுவாமிகள், சைவர்

காலம் கி.பி:19-ம் நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமைஎனும் அறுவகை இலக்கணங்கள் கூறும் நூல்.

        786 நூற்பாக்கள்

7)நூற்பெயர்:நேமிநாதம்

ஆசிரியர்:குணவீரபண்டிதர், களத்தூர், சமணசமயம்

காலம் கி.பி:13-ம் நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:எழுத்து, சொல் பற்றிக் கூறும் மொழி இலக்கண நூல்.

        99 வெண்பாக்கள்

8)நூற்பெயர்:நன்னூல்

ஆசிரியர்:பவணந்தி முனிவர், சமணர், மைசூர் நாட்டின் சனநாதபுரம்.

காலம் கி.பி:13-ம் நாற்றாண்டு

நூல் பொருள் முதலியன:எழுத்து, சொல் பற்றிக் கூறும் மொழி இலக்கண நூல், 

       462 நூற்பாக்கள்

9)நூற்பெயர்:இலக்கண விளக்கச்சூறாவளி.

ஆசிரியர்:சிவஞான முனிவர், சைவர்

காலம் கி.பி:18-ம் நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:எழுத்து, சொல் என்னும் இரண்டு அதிகாரங்கள்

10)நூற்பெயர்:பிரயோக விவேகம்

ஆசிரியர்:சுப்பிரமணிய தீட்சிகர், ஆழ்வார் திருநகரி

காலம் கி.பி:17-ம் நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:வடமொழியில் உள்ள பிரயோக விவேகத்தின் தழுவல்,  4 படலங்கள், 51 காரிகைகள்

11)நூற்பெயர்: இலக்கணக்கொத்து

ஆசிரியர்:சுவாமிநாத தேசிகர்

காலம் கி.பி:17-ம் நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:வேற்றுமையியல், வினையியல், ஒழியியல், -3 இயல்கள், 131 நூற்பாக்கள்.

பொருள் இலக்கண நூல்கள்;

1)நூற்பெயர்:இறையனார் அகப்பொருள்

ஆசிரியர்:இறையனார்

காலம் கி.பி:3 -ம்  நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:அகப்பொருள் நூல், முச்சங்க வரலாறு கூறும்.

2)நூற்பெயர்: நம்பி அகப்பொருள்

ஆசிரியர்:நாற்கவிராச நம்பி புளியங்குடி

காலம் கி.பி:12 -ம்  நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன: அகப்பொருள் நூல். 5 இயல்கள், 252 நூற்பாக்கள்

3)நூற்பெயர்: மாறன் அகப்பொருள் 

ஆசிரியர்: திருக்குருகைப் பெருமாள் கவிராயர், வைணவர்

காலம் கி.பி:16 -ம்  நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன: அகப்பொருள் நூல். 5 இயல்கள், 363 நூற்பாக்கள், காரிகையாப்பில் இயன்றது.

4)நூற்பெயர்:களவியற் காரிகை

ஆசிரியர்:தெரியவில்லை

காலம் கி.பி:-

நூல் பொருள் முதலியன:களவொழுக்கம் பற்றிக் கூறும் நூல். முழுமையாக கிடைக்கவில்லை. காரிகையாப்பில் இயன்றது.

5)நூற்பெயர்:தமிழ்நெறி விளக்கம்

ஆசிரியர்:தெரியவில்லை

காலம் கி.பி:-

நூல் பொருள் முதலியன: அகப்பொருள் நூல் தொடக்கமும் முடிவும் கிடைக்கவில்லை.

6)நூற்பெயர்: பன்னிரு படலம்

ஆசிரியர்:பன்னிருவர்

காலம் கி.பி:8 -ம்  நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன: புறப்பொருள் நூல்

7)நூற்பெயர்:புறப்பொருள் வெண்பாமாலை

ஆசிரியர்:ஐயனாரிதனார்

காலம் கி.பி:9 -ம்  நூற்றாண்டு

நூல் பொருள் முதலியன:புறப்பொருள் நூல், 12 திணைகளில் புறப்பொருள் கூறும். 361 பாடல்கள்

Leave a Comment