TNPSC, TRB, VAO, GROUP EXAM: GK Q/A, இந்திய அரசியலமைப்பு : ( Notable Points ) - Tamil Crowd (Health Care)

TNPSC, TRB, VAO, GROUP EXAM: GK Q/A, இந்திய அரசியலமைப்பு : ( Notable Points )

TNPSC,TRB, VAO, GROUP EXAM: GK Q/A, இந்திய அரசியலமைப்பு : ( Notable Points )

GK Q/A:

 1)அரசியல் சாசனத்தின் எந்தப் பிரிவு நாகலாந்து மாநிலத்திற்கு சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது ?

a) பிரிவு 371-Ab) பிரிவு 371-B   c) பிரிவு 371-C   d) பிரிவு 371-D

2)இந்தியாவின் முதல் தீவு மாவட்டம் எது?

a) மஜுலி  b) அந்தமான்  c) மாலத் தீவு  d) டாமன் மற்றும் டையூ

3)அண்மையில், ஜம்மு & காஷ்மீர் மாநிலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அவை :

a) ஜம்மு & காஷ்மீர் மாநிலமாகவும், லடாக் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும்.

b) லடாக் மாநிலமாகவும், ஜம்மு & காஷ்மீர் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும்.

c) ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் மாநிலங்களாகவும்.

d) ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளாகவும்

4)மேகாலாயா எந்த மாநிலத்தினுள் சுயாட்சி மாநிலமாக உருவாக்கப்பட்டது?

a) மிசோரம்   b) மணிப்பூர்   c) அஸ்ஸாம்    d) அருணாச்சல பிரதேசம்

5)கோவா, டாமன் மற்றும் டையு மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலமாக கோவா மாநிலமாக ஆன ஆண்டு

a) 1986     b) 1987    c) 1988     d) 1989

6)இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது?

(A) இந்தியன் மற்றும் இந்துஸ்தான்     (B) இந்தியா மற்றும் பாரதம்

(C) பாரதம்    (D) இந்தியா, பாரதம், இந்துஸ்தான்

7)பின்வருவனவற்றுள் எது 26 ஜனவரி 1950 அன்று படி இந்திய அரசியலமைப்பு முகவுரையில் சரியானது?

a) இறைமை, சமயசார்பின்மை குடியரசு

b) இறைமை, சமதர்மம், சமயசார்பின்மை

c) இறைமை, சமயசார்பின்மை , சமதர்மம், மக்களாட்சி, குடியரசு

d) இறைமை, மக்களாட்சி, குடியரசு


8)முகவுரையில் சமதர்ம, மதசார்பற்ற மற்றும் ஒற்றுமை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது

a) 41வது அரசியலமைப்பு திருத்த சட்டம்

b) 42வது அரசியலமைப்பு திருத்த சட்டம்

c) 43வது அரசியலமைப்பு திருத்த சட்டம்

d) 44வது அரசியலமைப்பு திருத்த சட்டம்

9)எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தில் “சமதர்ம மதச்சார்பின்மை” முகப்புரையில் சேர்க்கப்பட்டது

a) 41வது சட்டத்திருத்தம்   b) 42வது சட்டத்திருத்தம்

c) 43வது சட்டத்திருத்தம்    d) 44வது சட்டத்திருத்தம்

10)இந்திய அரசியலமைப்பில் சமய சார்பற்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? 

(1) அரசு அனைத்து மதங்களை காக்கின்றது 

(2) எந்த அரசும் எந்த மதத்தையும் தனியாக உயர்த்தக்கூடாது 

(3) சமய சார்பற்ற என்ற சொல் அரசியலமைப்பின் அடிப்படை ஆகும் 

(4) அரசு அனைத்து மதங்களையும் புறக்கணிக்கிறது

a) (1), (2) சரியானது – (3), (4) தவறானது

b) (2), (3) சரியானது – (1), (4) தவறானது

c) (1), (2), (3) சரியானது (4) மட்டும் தவறானது

d) (4) மட்டும் சரியானது (1), (2), (3) தவறானது

11)பின்வரும் எந்த கூற்று என்.ஏ. பல்கிவாலாவோடு தொடர்புடையது?

a) முகவுரை அரசியலமைப்பின் “அடையாள அட்டை”

b) முகவுரை நமது இறைமை பெற்ற ஜனநாயக குடியரசின் “ஜாதகம்”

c) முகவுரை இந்திய அரசியலமைப்பின் மிக முக்கிய பகுதி

d) முகவுரை அரசியலமைப்பின் “திறவு கோல்”

12)இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் பயன்படுத்தப்படும் ‘சகோதரத்துவம்’ என்ற சொல் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும். 

(a) அது பிராந்தியவாதத்திற்கு இடமளிக்காது 

(b) அது வகுப்புவாதத்திற்கு இடமளிக்கும் 

(c) அது சாதியவாதத்திற்கு இடமளிக்காது 

(A) (a) மற்றும் (c)

(B) (b) மட்டும்

(C) (a) மற்றும் (b)

(D) (c) மட்டும்

13)கீழ்கண்டவற்றை பொருத்துக 

முகப்புரையின் பதம் கூறியவர் 

(a) அரசியல் ஜாதகம் – 1. சர் ஐவர் ஜென்னிங் 

(b) அரசியலமைப்பின் சாவி – 2. தாகுர்தாஸ் பர்கவ்

(c) அரசியலமைப்பின் ஆன்மா – 3. பி. ஆர். அம்பேத்கர் 

(d) வழக்கறிஞர்களின் சொர்க்கம் – 4. எர்னஸ்ட் பார்க்கர் 

(a) (b) (c) (d)

(A) 1 2 3 4

(B) 2 1 4 5

(C) 4 5 2 1

(D) 1 4 3 2

14)இந்திய அரசியலமைப்பின் பதினோராவது பகுதி எதனை பற்றி விவரிக்கிறது?

a) மத்திய-மாநில உறவுகள்     b) மத்திய அரசாங்கம்

c) மாநில அரசாங்கம்     d) தீர்ப்பாயம்

15)கீழ்க்கண்டவற்றில் இந்திய அரசியலமைப்பின் 11வது அட்டவணையில் இல்லாத சரத்து எது?

a) சமூகக் காடுகள்    b) உடல் நலம் மற்றும் சுகாதாரம்

c) பொது விநியோக முறை     d) விலங்கு வதைபடுதலைத் தடை செய்தல்

16)அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356-ஐ பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கீழ்க்காணும் எந்த வழக்கில் வழங்கப்பட்டது?

a) இந்திரா ஷானே வழக்கு       b) எஸ். ஆர். பொம்மை வழக்கு

C) மினர்வா மில் வழக்கு        d) கேசவானந்த பாரதி வழக்கு

17)கீழ்க்கண்டவற்றில் 21வது அரசியலமைப்புச் சட்டதிருத்தம், 1967-ன் மூலமாக எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட மொழி எது?

a) போடோ     b) நேபாளி     c) கொங்கனி     d) சிந்தி

18)பின்வரும் அட்டவணைகளில் மொழிகள் பற்றிய அட்டவணை எது?

a) எட்டாவது அட்டவணை        b) பதினோராவது அட்டவணை

c) நான்காவது அட்டவணை      d) ஆறாவது அட்டவணை

19)இந்தியத் தலைமைக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் யாருக்கு பொறுப்புடையவர் ?

a) குடியரசுத் தலைவர்   b) பிரதம அமைச்சர்  c) உச்ச நீதிமன்றம்

d) பாராளுமன்றம்

20)1955ம் ஆண்டு அலுவல் மொழி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படவர் யார்?

a) கோபிந்த் பல்லப் பந்த்      b) B.G. கெர்     c) M.P. ஜெயின்     d) V.S. மலிமத்

21)கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது சரியானது இல்லை

a) கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் ஒவ்வொரு நிதி ஆண்டும் குடியரசு தலைவரிடமும் மாநில ஆளுநர்களிடமும் தணிக்கை அறிக்கை அளிக்க வேண்டும்

b) தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

c) மாநில சட்ட பேரவைகளில் அறிக்கை தாக்கல் செய்ய தேவையில்லை

d) கணக்கு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின் சம்பளம் மற்றும் இதர படிகள் இந்திய தொகுப்பு நிதியத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.

22)இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஷரத்து 370 எதனைப் பற்றி குறிப்பிடுகிறது?

a) தேர்தல்   b) அவசர நிலை பிரகடனம்   c) ஜம்மு காஷ்மீரில் தன்னாட்சி

d) மேற்கூறிய எதுவுமில்லை

23)நிதிபுனராய்வின் முக்கியத்துவத்தை நடைமுறைப்படுத்திய நாடு

a) இங்கிலாந்து      b) அமெரிக்கா    c) ஜெர்மனி   d) ரஷ்யா

24)இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?

(A) 7வது அட்டவணை   (B) 6வது அட்டவணை     (C) 10வது அட்டவணை

(D) 11வது அட்டடவணை

25)எந்த சட்டம் மத்திய அரசாங்கத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியது?

A) இந்திய கவுன்சில் சட்டம் 1861   B) இந்திய கவுன்சில் சட்டம் 1892

C) இந்திய அரசாங்க சட்டம் 1935  D) சுதந்திர சட்டம் 1947

26)ரஷ்யாவிலும், சீனாவிலும் சமதர்ம அரசு உருவாக ___________ யின் அறிவுரைகளே காரணமாகும்.

A) J.S. மில்   B) J.A. சும்பீட்டர்   C) கார்ல் மார்க்ஸ்    D) ஆர்தர் லூயிஸ்

27)சமுதாய ஒப்பந்த கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்

a) மார்கன்  b) ரூஸோ      c) சர் ஹென்றி மெயின்   d) ஆடம்ஸ்மித்

28)கீழ்கண்டவற்றில் எது இந்திய பாராளுமன்ற அரசாங்கத்தின் சிறப்பு அம்சம் இல்லை?

a) பெரும்பான்மை ஆட்சி   b) கூட்டுப் பொறுப்பு   c) அரசியல் பன்முகத்தன்மை

d) ரகசியம் பாதுகாத்தல்

29)“இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக, ஒரு சமூக ஆவணமாகும்” எனக் கூறியவர் யார்?

a) கிரன்வில் ஆஸ்டின்    b) பைலி    c) மோதிலால் நேரு   

d) மேற்கூறிய எதுவுமில்லை

30)இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது

a) 26 நவம்பர் 1949     b) 26 ஜூலை 1949

c) 26 மே 1949             d) 26 ஜூன் 1949

31)இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன?

a) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள்

b) 2 ஆண்டுகள், 9 மாதங்கள், 15 நாட்கள்

c) 2 ஆண்டுகள், 8 மாதங்கள். 10 நாட்கள்

d) 2 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள்

32)மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்திய சட்டம் எது?

a) இந்திய கவுன்சில் சட்டம் 1892    b) இந்திய கவுன்சில் சட்டம் 1861

c) இந்திய கவுன்சில் சட்டம் 1909   d) இந்திய அரசுச் சட்டம் 1919

33)நமக்கு ஏன் அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது ? 

(i) நவீன அரசின் அதிகார வரம்புகளை கட்டுக்குள் வைக்க. 

(ii) ஐக்கிய நாடுகள் அவையில் உறுப்பினராக 

(iii) பெரும்பான்மைவாதத்தின் கொடுங்கோன்மையைத் தடுக்க

a) (i) மற்றும் (ii) மட்டும்   b) (ii) மட்டும்    c) (i) மற்றும் (iii) மட்டும்

d) (iii) மட்டும்.

இந்திய அரசியலமைப்பு : ( Notable Points )

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்:(Constitutional Bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.

1. தேர்தல் ஆணையம் Art.324

2. மத்திய தேர்வாணையம் Art.315-323

3. மாநில தேர்வாணையம் Art.315-323

4. நிதிக்குழு Art.280

5. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் Art.338

6. பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் Art.338-A

7. மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் Art.350-B

8. தலைமை தணிக்கை அதிகாரி (CAG) Art.148

9. அட்டர்னி ஜெனரல் Art.76

10. அட்வகேட் ஜெனரல் Art.165

################################

அரசியலமைப்பு சாராத அமைப்புகள்:( Non- Constitutional Bodies)
அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

1. திட்டக்குழு March 1950

2. தேசிய வளர்ச்சிக் குழு August 1952

3. தேசிய மனித உரிமை ஆணையம் 1993

4. மாநில மனித உரிமை ஆணையம் 1993

5. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964

6. மத்திய தகவல் ஆணையம் 2005

7. மாநில தகவல் ஆணையம் 2005

###############################

மத்தியிலும் மாநிலத்திலும் Art.52 to 151 மத்திய அரசாங்கம்
Art.52 to 237 மாநில அரசாங்கம்

Art.32 உச்சநீதிமன்றத்தின் நீதிப்பேராணை

Art.226 உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை

Art.74 அமைச்சரவை ஆலோசனைப்படி குடியரசு தலைவர் செயல்படுதல்

Art.163 அமைச்சரவை ஆலோசனைப்படி ஆளுநர் செயல்படுதல்

Art.78 பிரதமரின் பணிகள்

Art.167 முதல்வரின் பணிகள்

Art.72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்

Art.161 ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்

Art.123 குடியரசுத் தலைவரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்

Art.213 ஆளுநரின் அவசர சட்டங்கள் பிறப்பிக்கும் அதிகாரம்

Art.110 பண மசோதா

Art.199 பண மசோதா (மாநிலத்தில்)

Art.112 வருடாந்திர நிதிநிலை அறிக்கை

Art.202 பட்ஜெட் (மாநிலத்தில்) 

Art.266 ஒருங்கிணைந்த நிதியம்

Art.267 அவசரகால நிதி

##########################@#

அரசியல் கட்சிகள் : 

தேசிய கட்சி அங்கீகாரம்

*ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட 4  அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% வாக்குகள் மக்களவை தேர்தலில் பெற்றிருக்க வேண்டும்.

*ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் குறைந்தது 4 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மாநில கட்சி அங்கீகாரம்

*ஒரு கட்சி மாநில அங்கீகரிக்கப்பட, மாநில பொதுத் தேர்தலில் குறைந்தது 6% வாக்குகள் பெற வேண்டும்.

 *மேலும் குறைந்தது இரண்டு எம்.எல்.ஏக்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

*தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன.

*(2009 ஆம் ஆண்டு தேர்தல்) அவை.

1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)

2. பாரதீய ஜனதா கட்சி (BJP)

3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)

4. கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)

5. கம்யூனிஸ்ட் கட்சி (CPI)

6. தேசியவாத காங்கிரஸ் (NCP)

7. ராஷ்ட்ரி ஜனதா தளம் (RJD)

*தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன.

*மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம் பெறாத கட்சிகள் உள்ளன.

#############################

உச்சநீதிமன்றம் (Art. 124 -147)

*உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிறநீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

*உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை நீதிபதியையும் 30 நீதிபதிகளையும்

(30+1) கொண்டது.

*Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம் (Court of Record)

*Art.131 முதன்மைப்பணி (Original Jurisdiction)

*Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்

*Art.143 ஆலோசனை அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை

*Art.137 தனது தீர்ப்பை மறுபரீசீலனை செய்தல் (Revisory Jurisdiction)

*Art.32 நீதிப்பேராணை அதிகாரம்

உச்சநீதிமன்றம் டெல்லியில் அமைந்துள்ளது.

 உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65.

###############################

உயர்நீதிமன்றம்:

• இந்தியாவில் 21 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.

• இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா

• இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்

• இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்

• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பெயர்கள் முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் உயர்நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.

• குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக பெஞ்சுகளைக் கொண்டுள்ளது

• மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

• உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 62 ஆக இருந்ததை 65 என மாற்ற கேபினட் தீர்மானித்துள்ளது.

* நிதி ஆணையம் Art.280 -5 வருடத்திற்கு ஒரு முறை குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிறது.

*மத்திய, மாநில அரசுகளுக்கைடையே வரி வருவாயை பகிர்ந்தளிப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் நிதி ஆணைய முதல் தலைவர் நியோகி,

*12வது தலைவர் கே.சி.ரங்கராஜன்

*13வது நிதி ஆணையத்தின் தலைவர் விஜய் எல்.கெல்கர்

*14வது நிதி ஆணையத்தின் தலைவர் Y.V.Reddy

* தேர்தல் ஆணையம் Art.324-329

தற்போது தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்

1.    Dr.Nasim Zaidi   தலைமை தேர்தல் ஆணையர்,

2. Mr. Achal Kumar Joti  இவர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

###############################

பிரதமர் (Prime Minister)

• இந்திய அரசாங்கத்தின் தலைவர்

• பெயரளவு அதிகாரம் உள்ளவர் குடியரசுத் தலைவர்

• உண்மையான அதிகாரம் உள்ளவர் பிரதமர்

• திட்டக்குழுவின் தலைவர்

• தேசிய வளர்ச்சிக் குழுத் தலைவர்

• தேசிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்

• அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.

• அமைச்சர்களுக்கான துறைகளை தேர்வு செய்கிறார்.

• அமைச்சர்கள் கூட்டுப் பொறுப்பாக நாடாளுமன்றத்திற்கு (குறிப்பாக

லோக்சபா) கட்டுப்பட்டவர்கள், தனித்தனியாக குடியரசுத் தலைவருக்கு பொறுப்பானவர்கள்

• ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் மொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்

•அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவதும் , துறைகளை மாற்றுவதும் பிரதமரே!

*அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்யவும்,குடியரசுத் தலைவருக்கு பிரதமர்

ஆலோசனை வழங்குவார்.

• அனைத்து உயர் அதிகாரிகள் நியமானத்தில் குடியரசுத் தலைவருக்கு உதவுவார்.

• தேசிய நெருக்கடி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி, நிதி நெருக்கடி போன்றவற்றை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.

• நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் -நேரு

• வங்கிகளை தேசியமயமாக்கியவர்-இந்திரா காந்தி

• ஜமீன் தாரி முறையை ஒழித்தவர்- நேரு

• கொத்தடிமை முறையை ஒழித்தவர்-இந்திரா காந்தி

• இந்தியாவின் உயர்ந்த விருதான“பாரத ரத்னா”, பாகிஸ்தானின் உயர்ந்த

விருதான ‘நிசாமி பாகிஸ்தானி’ இரண்டையும் பெற்றவர்- மொரார்ஜி தேசாய்

• தாஸ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்- லால்பகதூர் சாஸ்திரி

• சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் -இந்திரா காந்தி

• மிக அதிக வயதில் பிரதமரானவர்-மொரார்ஜி தேசாய், இவர் காங்கிரஸ்

கட்சியை சாராதவ்ர் என்பதும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த முதல்

பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது

• பாராளுமன்றத்தை எதிர் கொள்ளலாமலேயே பதவிக்காலம் முடிவுற்றவர்- சரண்சிங்

• நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து பதவி இழந்த முதல்

பிரதமர் -வி.பி.சிங்

• தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர்-

பி.வி.நரசிம்மராவ். இவர் எழுதிய நூல்-இன்சைடர்

• இந்தியாவின் முதல் பெண் பிரதமர்-இந்திரா காந்தி. தேர்தலில் 

தோல்வியடைந்த முதல் பிரதமரும் இவரே.

• தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்-பி.வி.நரசிம்மராவ்

• ரூபாய் நோட்டுக்களில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர்- மன்மோகன் சிங் (ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த போது)

• திட்டக்கமிஷன் துணை தலைவராகவும் பின் தலைவராகவும் பதவி வகித்தவர்-மன்மோகன் சிங்

##################################

ஓய்வு பெறும் வயது:

மாநில அரசுப் பணியாளர்-58

மாநில அரசுப் பணியாளர் ‘டி’ பிரிவு-60

மத்திய அரசுப் பணியாளர்-60

உயர்நீதிமன்ற நீதிபதி-62

தற்போது (65)

உச்சநீதிமன்ற நீதிபதி-65

மாநிலப் பொதுப்பணி ஆணையத் தலைவர்-62

மத்திய பொதுப்பணி ஆணையத் தலைவர்- 65

மாநிலத் தேர்தல் ஆணையர்-62

மத்திய தேர்தல் ஆணையர்-65

தலைமைக் கணக்கு தணிக்கையாளர்-65

மாநில மனித உரிமை ஆணையத் தலைவர்-70

மத்திய மனித உரிமை ஆணையத் தலைவர்-70

மாநில முதல்வர் வயது வரம்பு இல்லை

மாநில ஆளுநர் வயது வரம்பு இல்லை

பிரதமர் வயது வரம்பு இல்லை

குடியரசுத் தலைவர் வயது வரம்பு இல்லை.

###############################

மாதம் ஒன்றுக்கு சம்பளம்:

குடியரசுத் தலைவர் -ரூ.1,50,000

துணைக் குடியரசுத் தலைவர் -ரூ.1,25,000

ஆளுநர் -ரூ.1,10,000

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி- ரூ.1,00,000

உச்சநீதிமன்ற மற்ற நீதிபதிகள் -ரூ.90,000

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி- ரூ.90,000

உயர்நீதிமன்ற மற்ற நீதிபதிகள்-ரூ.80,000

• துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கென சம்பளம் எதுவும் 

வழங்கப்படுவதில்லை. ஆனால், ராஜ்ய சபா தலைவர் என்ற முறையில் 

சம்பளம் வழங்கப்படுகிறது.

• குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள காலத்தில், அதிகபட்சம் 6 மாதம்

 துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராகப் பணியாற்றுவார்.

அப்போது குடியரசு தலைவருக்குரிய சம்பளம் மட்டும் வழங்கப்படும்.

• துணைக் குடியரசுத் தலைவர் ராஜ்ய சபையின் தலைவர் (Ex Officer Chairman)

• பொதுவாக துணைக் குடியரசுத் தலைவருக்கு ராஜ்ய சபையில்

வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில், அவர் ராஜ்ய சபையின் 

உறுப்பினரல்ல.

• ஆனால், வாக்குகள் சமநிலையின் போது வாக்களிக்கிறார் (Casting Vote)

• குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், இரண்டு பதவிகளும் 

காலியாக உள்ள காலத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத்

தலைவராகப் பணியாற்றுவார்.

*அவ்வாறு பணியாற்றிய நீதிபதி -எம்.ஹிதயதுல்லா.

##################################

அரசியலின் முக்கியச்சொற்கள் எடுக்கப்பட்ட மூலமொழி :

பாலிடிக்ஸ் (Politics) -கிரேக்கம்

ஸ்டேட் (State)- டியூடோனிக்

சவரினிட்டி (Soverignity)- லத்தீன்

நேசன் (Nation) -லத்தீன்

லிபர்டி (Liberty)- லத்தீன்

லா (Law)- டியூடோனிக்

டெமாக்கரசி (Democracy) -கிரேக்கம்

பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் (Public Admin)- லத்தீன்

பீரோக்கிரசி (Bureaucracy) -பிரெஞ்ச்

பட்ஜெட் (Budget)- பிரெஞ்ச்

###################################

அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்

• இது பகுதி IV-ல் அமைந்துள்ளது.

• Art, 36 முதல் 51 வரை காணப்படுகிறது.

• அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது.

• Art 39 (D) சம வேலைக்கு சம கூலி.

• Art 40 கிராமப் பஞ்சயத்து.

• Art 41 முதுமை நோயுற்ற நிலையில் அரசு உதவி. 

• Art 42 பெண்களுக்கு பேறுகால விடுப்பு.

• Art 43 வாழ்க்கைக்கான கூலி.

• Art 44 நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்.

• Art 45-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி.

• Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி, பொருளாதார வசதி

• Art 47 வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்

• Art 48 பசுவதை தடுத்தல் 

• Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல்

• Art 50 நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல்

• Art 51 உலக அமைதியில் நாட்டம் கொள்ளுதல்.

###################################

குடியரசுத் தலைவர். (PRESIDENT)

• இந்தியாவின் முதல் குடிமகன்

• அரசின் தலைவர் (Executive Head of the State)

• 42-வது சட்ட திருத்ததின்படி குடியரசுத் தலைவர் 

அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். (Art. 74 (I))

• குடியரசுத் தலைவர் தேர்தல் முறை பற்றி Art 54 மற்றும் 55 குறிப்பிடுகிறது. 

குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது, மக்களவை, மாநிலங்களவை மற்றும் 

மாநிலச்சட்டப் பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட 

Electoral College.

• பிரதமர், பிரதமரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களையும்

குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

• உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள்.

• உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள்.

• அட்டர்னி ஜெனரல்.

• தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள்.

• மத்திய பொதுப்பணி ஆணையத் (UPSC) தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள்.

• மாநில ஆளுநர்.

•முப்படைகளின் தளபதிகள்.

• தலைமை தணிக்கை அதிகாரி CAG.

• நிதி ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள். வெளிநாட்டுக்கான 

இந்திய தூதர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

• முப்படைகளின் தலைவர் இவரே.

• போர்க்காலத்தில் போர் அறிவிப்பு செய்வதும், போர் நிறுத்தம்

செய்வதும் குடியரசுத் தலைவரே.

• ராஜ்ய சபாவுக்கு 12 பேரை நியமனம் செய்கிறார்.

• லோக்சபாவுக்கு 2 ஆங்கிலோ இந்தியரை நியமனம் செய்கிறார்.

##############################

அவசரக் கால அதிகாரிகள் (EMERGENCY POWERS)
நெருக்கடி நிலை அதிகாரம் 3 அவை

• Art 352 தேசிய நெருக்கடி NATIONAL EMERGENCY

• இது அமல்படுத்திய ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்

பெற வேண்டும்.

• இது வரை மூன்று முறை (1962, 1971, 1975) தேசிய நெருக்கடி 

அமல்படுத்தப்பட்டுள்ளது.

*Art.356 மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி STATE EMERGENCY

• இது அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்

பெற வேண்டும்.

• இதுவரை 100 முறைக்கு மேல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

• இதனை அதிக அளவில் பயன்படுத்திய பிரதமர் -இந்திராகாந்தி.

Art . 360

###############################

நிதி நெருக்கடி FINANCIAL EMERGENCY

•நிதி நெருக்கடி இதுவரை இந்தியாவில் அமல்படுத்தப்படவில்லை.

• இதனை அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல்

பெற வேண்டும்.

##################################

குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்:

• குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.

• குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம்.

• குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது 

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி. 

• குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது 

துணைக் குடியரசுத் தலைவரிடம்.

• குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

• Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை.

 எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

• Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவர்

மீது குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.

• பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத் 

தலைவர்.

• பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர்

லோக்சபா சபாநாயகர்.

• முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் -ராஜேந்திர பிரசாத்.

• முதல் துணைக் குடியரசுத் தலைவர்-டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். 

பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் இவரே.

• அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர்- டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

• முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர்-டாக்டர் ஜாகீர் உசேன்.

• முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர்-கியானி ஜெயில் சிங்.

• முதல் தலித் குடியரசுத் தலைவர்-டாக்டர் கே.ஆர்.நாராயணன்.

• முதல் பெண் குடியரசுத் தலைவர்-பிரதிபா பாட்டீல்.

• பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்-

கே.ஆர்.நாராயணன்.

• பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும்

சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர்-டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

• Art. 72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்.

• Art. 123 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.

• குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6

வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.

• குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் – டாக்டர் ஜாகீர் உசேன்

Leave a Comment