TNPSC, TRB, VAO, GROUP 2: இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்..!! - Tamil Crowd (Health Care)

TNPSC, TRB, VAO, GROUP 2: இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்..!!

 TNPSC, TRB ,VAO, GROUP 2: இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்..!! 

 இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்..!! 

I ) உலகிலேயே மிக நீளமான எழுதப்பெற்ற அரசியலமைப்பு : 

இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிக நீளமான எழுதப்பட்ட ( Written constitution ) அரசியலமைப்பு ஆகும் இது 465 பிரிவுகள் 25 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகளைக் கொண்டது . 

இந்நீண்ட அரசியலமைப்பிற்கான முக்கிய காரணங்கள் : – 

நாட்டின் பரந்த புவியமைப்பு – காலனியாதிக்க சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தம் போன்ற வரலாற்று காரணிகள் . 

ஜம்மு காஷ்மீர் தவிர நாடு முழுவதற்கும் ஒரே அரசியலமைப்பு . – அரசியலமைப்பு நிர்ணயசபையில் ( Constituent Assembly ) டம் பெற்ற சட்ட வல்லுனர்களின் ஆதிக்கம் . 

II ) பல நாடுகளின் அரசியலமைப்பின் நமது இந்திய அரசியலமைப்பு எடுத்துக் கொண்டுள்ளது – 

1)அடிப்படை உரிமைகள் ( Fundamental Rights ) அமெரிக்கா 

2)முகப்புரை ( Preamble )-அமெரிக்கா  

3)நீதிபதிகள் பதவி நீக்கம் ( Removal of judges of SC – HC )- அமெரிக்கா  

4)தனித்தியங்கும் நீதித்துறை ( Independent judiciary ) -அமெரிக்கா  

5)நீதிப்புணராய்வு ( Judicial Review ) – அமெரிக்கா  

6)அடிப்படைக் கடமைகள் ( Fundamental Duties ) – ரஷ்யா

7)ஐந்தாண்டுத் திட்டம் ( Five year plan ) – ரஷ்யா 

8)வழிகாட்டு நெறிமுறைகள் ( DPSP )-அயர்லாந்து 

9)ராஜ்யசபை உறுப்பினர் நியமனம் ( Nomination of Rajyasabha Member ) -அயர்லாந்து 

10)குடியரசுத் தலைவர் தேர்தல் முறை ( Method of election of the President )- அயர்லாந்து  

11)பாராளுமன்ற முறை ( Parliamentary Type )- இங்கிலாந்து

12)சட்டத்தின் ஆட்சி ( Rule of law )- இங்கிலாந்து

13)ஒற்றைக் குடியுரிமை ( Single citizenship ) – இங்கிலாந்து 

14)கீழ் சபைக்கு அதிக அதிகாரம் ( Lower house more powerful ) – இங்கிலாந்து 

15)பாராளுமன்ற இரு அவை ( Bicameral Parliament ) -இங்கிலாந்து 

16)மக்களவை தலைவர் ( Speaker in the Lok Sabha )-இங்கிலாந்து 

17)கூட்டாட்சி முறை ( Federal System )-கனடா

18)நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகள் ரத்து ( Suspension of FR during Emegency ) .ஜெர்மன்.

19)பொதுப்பட்டியல் ( Concurrent List )- ஆஸ்திரேலியா

 20)மத்திய – மாநில உறவுகள் ( Centre – State Relations )-ஆஸ்திரேலியா

21)அரசியலமைப்புச் சட்ட திருத்தம் ( Amendment of Constitution )- தென் ஆப்பிரிக்கா – தற்போதைய அரசியலமைப்பானது 75 % 1935 ம் ஆண்டில் இந்திய அரசாங்க சட்டத்தின் மறுபதிப்பு 

22)நெருக்கடி நிலை – இந்திய அரசாங்கச் சட்டம் 1935

23)அரசு நிர்வாக அமைப்பு முறை – இந்திய அரசாங்கச் சட்டம் 1935 

24)ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) தோற்றம்– இந்திய அரசாங்கச் சட்டம் 1935 .

Leave a Comment