TNPSC, TET, TRB, VAO, GROUP I,II,IV:ஆகுபெயர் (தமிழ் இலக்கணம்), (Constitution of India ), Question And Answer
ஆகுபெயர் (தமிழ் இலக்கணம்):
இந்தியா மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றிபெற்றது. இந்தியா ஆசியாக் கண்டத்தில் உள்ளது. இந்த இரு தொடர்களையும் படித்துப் பாருங்கள். முதல் தொடர் ‘இந்தியா’, மட்டைப்பந்து வீரர்களைக் குறிக்கிறது. இரண்டாம் தொடர் இந்தியா’, இடத்தைக் குறிக்கிறது.
ஒன்றன் இயற்பெயர் தன்னைக் குறிக்காமல், தன்னோடு தொடர்புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு வருவதற்கு ஆகுபெயர் என்பது பெயர். இஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
1. பொருளாகுபெயர்:
‘மல்லிகை சூடினாள்’
அங்கு மல்லிகை என்பது கொடியாகிய முதற்பொருளைக் குறிக்காமல் பூ என்னும் சினையைக் குறிக்கிறது. இவ்வாறு முதற்பொருள் சினைக்கு (உறுப்புக்கு) ஆகி வருவது, முதலாகு பெயர் எனப்படும்.
இதனைப் பொருளாகுபெயர் எனவும் கூறுவர்.
2. இடவாகு பெயர்:
இந்தியா மட்டைப்பந்து விளையாட்டில் வெற்றிபெற்றது.
3. காலவாகுபெயர்:
திசம்பர் சூடினாள்
திசம்பர் என்னும் மாதப்பெயர், அம்மாதத்தில் பூக்கும் பூவிற்கு ஆகி வந்தது. அதனால், இது காலவாகுபெயர்
4. சினையாகு பெயர்
சினை என்றால் உறுப்பு.
வெற்றிலை நட்டான்.
இத்தொடரில் உள்ள வெற்றிலை என்பது சினையாகிய இலையைக் குறிக்காமல், அதன் முதல் பொருளாகிய கொடிக்கு ஆகி வந்தது. அதனால், இது சினையாகு பெயர் ஆயிற்று.
5. பண்பாகு பெயர்
பொங்கலுக்கு முன் வீட்டுச் சுவர்களுக்கு ‘வெள்ளை’ அடிப்போம். வெள்ளை என்பது நிறப்பண்பு. ஆனால், அது நிறத்தைக் குறிக்காமல், சுண்ணாம்பைக் குறித்து வந்தது. அதனால், இது பண்பாகு பெயர். இதனைக் குணவாகுபெயர் எனவும் கூறுவர்.
6. தொழிலாகு பெயர்
‘பொங்கல்’ உண்டான்
இங்குப் பொங்கல் என்பது பொங்குதலாகிய தொழிற்பெயர். இத்தொழிற் பெயர் தொழிலைக் குறிக்காமல், அத்தொழிலால் ஆகும் உணவைக் குறித்தது. அதனால், இது தொழிலாகு பெயர்.
இந்திய அரசியலமைப்பு (Constitution of India )
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும்.
இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது.
முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது.
அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.
இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘கூட்டாட்சி’ (கூட்டரசு – federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக ‘ஒன்றியம்’ (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், ” இறையாண்மை உடைய மக்களாட்சி, சமதர்ம, சுதந்திரக் குடியரசு” என்றும் ” இந்திய ஒன்றியம் என்றும் இந்தியா7 பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் ‘அடிப்படை உரிமைகளும்’ அடங்கும்.
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, ‘கடன்களின் பொதி’ என்பர். ‘கூட்டாட்சி முறையை’ கனடாவில் இருந்தும், ‘அடிப்படை உரிமைகள்’ அமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய சோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா இருந்தும், மாநிலங்களவை நியமன எம்.பி.,க்கள் முறையை அயர்லாந்திடம் இருந்தும் பெற்றது.
(இந்திய அரசியலமைப்பு) Question And Answer
QUESTION:
1. குடியரசு தலைவர் மாளிகையில் குடியேறிய முதல் இந்திய குடியரசு தலைவர்…..?
2. இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்……?
3. தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துகளின் எண்ணிக்கை ….?
4. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்…..?
5. இந்திய அரசியலமைப்பின் படி இந்தியாவின் பெயர்….?
6. இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம்….?
7. அடிப்படை சுதந்திரங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் ஷரத்து……?
8. ஷரத்து 32ன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை…?
8. உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது….?
9. முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கல்வித்தகுதியை நிர்ணயித்த மாநிலம்…..?
10. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து எது….?
11. அரசியலப்பின் எந்த விதி ஜனாதிக்கு மக்கலவையை கலைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ளது….?
12. ஆளுநர் அவசர சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் எந்த ஷரத்தில் உள்ளது…..?
13. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் இந்தியப் பெண் பிரதிநிதி யார் …?
14. Rule of law நமக்கு வழங்கிய நாடு…..?
15. அடிப்படை உரிமைகள் கொண்ட பிரிவு எத்தனை ஷரத்துகளை உடையது……?
16. தமிழ்நாட்டிற்க்கான ராஜ்யசபைக்கான மொத்த இடங்கள்…..?
17. தமிழ்நாட்டிற்க்கான லோக்சபைக்கான மொத்த இடங்கள்….?
18. இந்திய பாராளுமன்ற மேலவை உறுப்பினரின் பதவிக்காலம்…..?
Answers
1.டாக்டர். இராஜேந்திர பிரசாத்
2.ராஷ்டிரபதி பவன் (குடியரசு தலைவர் மாளிகை )
3 450
4.ஜனவரி 26, 1950
5.பாரத்
6.முகவுரை
7.ஷரத்து 19
8.ஐந்து
9.அமெரிக்கா
10.ராஜஸ்தான்
11,ஷரத்து 1
12 விதி 85
13.ஷரத்து 213
14.விஜயலக்ஷ்மி பண்டிட்
15.இங்கிலாந்து
16. 23 ஷரத்துகள்
17.18
18.6 ஆண்டுகள்ஆண்டுகள்