TNPSC - Study Materials-GROUP-4, VAO ,TAMIL (QUESTION/ ANSWER)-7. - Tamil Crowd (Health Care)

TNPSC – Study Materials-GROUP-4, VAO ,TAMIL (QUESTION/ ANSWER)-7.

 TNPSC – Study Materials-GROUP-4, VAO ,TAMIL (QUESTION/ ANSWER)-7.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை

* இரண்டு (அ) பல சொற்கள் இணைவதற்குப் புணர்ச்சி என்று பெயர்
* நிலை மொழியும், வரு மொழியும் சேரும்போது எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது இயல்புப் புணர்ச்சி
* பொன்+வளையல் – பொன்- நிலைமொழி, வளையல் – வருமொழி, நிலைமொழியில் ‘ன்’ – மெய்யீரு.
* பனை + மரம் – இதில் நிலைமொழியில் உயிரீறு உள்ளது.
* வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய்யாக இருந்தால் மெய்முதல் எனச் சொல்ல வேண்டும். (பொன்+குடம்)
* வருமொழியின் முதல் எழுத்து உயிராக இருந்தால் உயிர் முதல் எனச் சொல்ல வேண்டும் (கண்+அழகு)
* நிலைமொழியும், வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை விகாரப் புணர்ச்சி என்பர்.
* விகாரப் புணர்ச்சி மூவகைப்படும்.
* தமிழ் +மண் என்பது இயல்புப் புணர்ச்சி. பொன்+குடம் என்பது தோன்றல், வாழை+தோட்டம் என்பது விகாரப் புணர்ச்சி
* இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
* இ,ஈ,ஐ ஆகிய முன் உயிர்வரின் ய் தோன்றும், அ, ஆ, உ, ஊ, ஓ முன் உயிர்வரின் வ் தோன்றும். ஏ முன் உயிர்வரின் வ், ய் இரண்டும் தோன்றும்.
கிளி + அழகு = கிளியழகு, தீ+எரிகிறது = தீயெரிகிறது. பனை+ஓலை = பனையோலை
குண+அழகி = குணவழகி, பலா+இலை = பலாவிலை, பூ+அழகி =.பூவழகி, கோ + இல் = கோவில், தே+ஆரம் = தேவாரம், சே+அடி = சேவடி, சேயடி.
* உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வே (மலர்+அடி = மலரடி)
* தனிக்குறில் முன்று ஒற்று உயிர்வரின் இரட்டும் (கண்+அழகு = கண்ணழகு)
* எழுத்துக்கள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியணுக்கள்.
* எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை இடப்பிறப்பு என்பர்.
* உதடு முதலான உறுப்பிகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதனை முயற்சிப் பிறப்பு எனவும் கூறுவர்.
* ஒலி எழக் காரணமான காற்று நிலைபெறும் இடங்களைக் காற்றறைகள் எனவும், ஒலி எழுவதற்குத் துணை செய்யும் உறுப்புகளை ஒலிப்பு முனைகள் எனவும் கூறுவர்.
* எழுத்துக்களின் பிறப்பினை நன்னூலார் (பவணந்திமுனிவர்) கூறினார்
* பன்னிரண்டு உயிரும், ஆறு இடையின எழுத்துகளும் கழுத்தில் பிறக்கின்றன. * மெல்லின எழுத்துக்கள் மூக்கில் பிறக்கின்றன.
* வல்லின எழுத்துக்கள் மார்பில் பிறக்கின்றன. மெல்லின எழுத்துக்களை மூக்கொலி எனவும் வழங்குவர்.
* ஆய்தமாகிய சார்பெழுத்து தலையை இடமாக கொண்டு பிறக்கிறது.
* சார்பெழுத் தேனவும் தம் முதல் அனைய
* இரண்டு உதடுகள் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள் – ப், ம்
* உதடுகள் குவித்து ஒலிப்பதனால் பிறக்கும் எழுத்துக்கள் – உ, ஊ, ஒ,ஓ, ஔ
* தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
தொழிற்பெயர் இரு வகைப்படும்.
* விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் தொழிலை உணர்த்துவதற்கும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகும்.
* தொழிற்பெயரின் பகுதி திரிந்து வருவது முதனிலைத் திரிந்த தொழில்பெயர் ஆகும்.
* வினைமுற்று, வினையைக்குறிக்காமல் வினை செய்தவரைக் குறிப்பது வினையாலணையும் பெயர்.
* தொழில்பெயர் படர்க்கை இடத்தில் வரும். காலம் காட்டாது.
* வினையாலனையும் பெயர் மூவிடங்களிலும் வரும். முக்காலத்தையும் காட்டும்.
* பண்பை உணர்த்தும் பெயர் பண்புப் பெயர்.
* யான் என்னும் தன்னைப் பன்மைப் பெயர் உருபேற்கும் போது எம் எனத்திரியும்.
* நாம் என்னும் தன்மைப் பெயர் நம் எனக்குறுகும் யாங்கள், நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப் பெயர்கள் உருபேற்கும் போது எங்கள் எனத் திரியும்.
* நீ எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது உன் எனத்திரியும்.
* நீர் எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது உம் எனத்திரியும்.
* நீங்கள் எனும் முன்னிலைப் பெயர் உருபேற்கும்போது உங்கள் எனத்திரியும்.
* தான் என்னும் படர்க்கைப் பெயர் உருபேற்கும்போது தான் எனத்தெரியும்.
* தாம் என்னும் படர்க்கைப் பெயர் தம் எனத் திரிந்து உருபேற்கும்.
* தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர் தங்கள் எனத்திரியும்.
* காட்சி என்னும் தொழிற்பெயர் காண்+சி எனப் பிரியும்.
* மாட்சி என்பது பண்புப்பெயர் ஆகும்.
* வரவு என்னும் தொழிற்பெயரின் விகுதி – 2.
* வட்டம் என்பது வடிவப் பண்பு பெயர் ஆகும்.
* ஒரு செய்யுளில் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ளும் முறையை பொருள்கோள் என வழங்குவர்.
* பொருள்கோள் எட்டு வகைப்படும்.
* பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது ஆற்றுநீர் பொருள்கோள் ஆகும்.
* ஓரடியுள் உள்ள சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது மொழிமாற்றுப் பொருள் கோளாகும்.
* செய்யுளில் இருக்கின்ற சொற்களை முறைமாறாமல் வரிசையாக அமைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறையப் பொருள்கோள்.
* அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – இக்குறள் நிரல்நிறைப் பொருள்கோள்
* வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல் போல பொருள்கொள்வது விற்பூட்டு பொருள்கோள் ஆகும்.
* “நெருதல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் அலகு” – இக்குறல் விற்பூட்டுப்பொருள் கோளுக்குச் சான்றாகும்.
*  விற்பூட்டுப்பொருள் கோளை பூட்டுவிற் பொருள்கோள் எனவும் கூறுவர்.
*  ஊஞ்சல் கயிறு போல முன்னும் பின்னுமாகப் பொருள் கொள்வது தாப்பிசை பொருள்கோள் ஆகும்.
  *  தாப்பிசை என்பதும் தாம்பு+இசை எனப் பிரியும். (தாம்பு + ஊஞ்சல் கயிறு)
*  செய்யுளின் ஈற்றபியைப் பாடலின் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்ளுதல் அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆகும். (அளை-புற்று, பாப்பு-பாம்பு)
*  செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது – பூட்டுவிற் பொருள்கோள் ஆகும்.
*  பல அடிகளிலும் உள்ள சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும்.
*  செய்யுள் அடிகளை முன் பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோள்.
*  உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்பதற்கு சான்று பந்து+ஆட்டம் (பந்தாட்டம்)
*  டகர, ரகரக் குற்றியலுகரப் புணர்ச்சிக்குச் சான்று காடு+கோழி, ஆறு+பாலம்
*  மொழி மூவகைப்படும். ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனி மொழி
*  தொடர் மொழிக்கு சான்று படம் பார்த்தான்.
*  தனி மொழிக்கும், தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி
*  வினைமுற்று(முற்றுவினை) இரு வகைப்படும்.
*  “செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பவன் ஆறும் தருவது வினையே” – இதில் “வினையே” என்பது தெரிநிலை வினைமுற்றை உணர்த்தும்.
*  வினைமுற்றின் விகுதி குறைந்து நிற்கும் சொல் எச்சம். எச்சம் இரு வகைப்படும்.
*  ஓர் எச்சவினை பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும்.
*  பெயரெச்சம் கால வகையில் மூன்று வகைப்படும்.
*  பெயரெச்ச வாய்ப்பாடுகள் செய்த, செய்கின்ற, செய்யும்.
*  முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம்(வந்த பையன்)
*  பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்புப் பெயரெச்சம்(நல்ல பையன்)
*  ஓச்ச எச்சவினை, வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும் (படித்து வந்தான்)
*  வினையெச்சம் இருவகைப்படும். காலவகையால் மூவகை.
*  மடித்து வந்தான் – இறந்தகால வினையெச்சம்
*  படித்து வருகிறான் – நிகழ்கால வினையெச்சம்
*  படித்து வருவான் – எதிர்கால வினையெச்சம்
*  காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை தெரிநிலை வினையெச்சம்(படித்துத் தேறினான்)
*  காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பினை உணர்த்தி நின்று வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்பு வினையெச்சம்(மெல்ல பேசினான்)
*  ஒரு வினைமுற்றுச் சொல் எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்.
*  ஒரு பொதுச்சொல் முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஒரு பாலை நீக்கி மற்றொரு பாலைச் சுட்டுவது ஒன்றொழி பொதுச்சொல் என்பது பெயர். (வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்)
*  ஒரு சொல் தன் பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும். (வெற்றிலை தின்றாள்)
*  ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்குமுறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
*  இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்தியைசா நன்னூல்
*  இசை, குறிப்பு, பண்பு பற்றி வருவது இரட்டைக்கிளவி
*  விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி பற்றி வருவது அடுக்குத் தொடர்.
*  இளவழகன் வந்தான் இது வெளிப்படை தொடர்.
*  மாடு என்னும் சொல் அஃறினைப் பொதுப்பெயர் ஆகும்.
*  மாடு கன்றை ஈன்றது இத்தொடரில் மாடு என்பது பசுவைக் குறிக்கும். மாடு பால் கறந்தது என்பது குறிப்புச் சொல்.
*  வினா ஆறு வகைப்படும்.
*  திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் கேட்பது அறிவினா
*  நன்னூலை இயற்றியவர் யார்? மாணவர் ஆசிரியரைக் கேட்பது அறியாவினா
*  பாம்போ? கயிறோ? – ஐயவினா
*  பருப்பு உள்ளதா? என வணிகர்களிடம் கேட்பது கொளல்வினா
*  மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? –  கொடைவினா
*  முருகா சாப்பிட்டாயா? – ஏவல்வினா
*  வினாவிற்கு ஏற்பட விடையளிப்பதுதான் மொழி நடையின் சிறப்பு
*  விடை எட்டு வகைப்படும்.(இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்)
*  இது செய்வாயா? எனில் செய்யேன் எனபது மறைவிடை
*  இது செய்வாயா? எனில் செய்வேன் என்பது நேர்விடை
*  இது செய்வாயா? எனில் நீயே செய் என்பது ஏவல்விடை
*  இது செல்வாயா? எனில் செய்யாமல் இருப்பேனோ என்பது வினாஎதிர் வினாதல் விடை
*  இது செய்வாயா? எனில் உடம்பு நொந்தது என்பது உற்றுதுரைத்தல்
*  இது செய்வாயா? எனில் கை வலிக்கும் என்பது உறுவது கூறல் விடை
*  ஆடுவாயா? எனில் பாடுவேன் என்பது இனமொழி விடை
*  ஒரு பொருள் குறித்து வரும் சொற்களையே ஒருபொருட் பன்மொழி
*  ஒரு பொருட் பன்மொழிக்கு சான்று நடுமையம்
*  தேன் போன்ற மொழி என்பது விரியுவமை. தேன்மொழி – தொகை உவமை
*  ஒரு பொருள்ளை அதனை விடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.
*  உவமானத்தையும், உவமேயத்தையும் வேறுப்படுத்தாது. இரண்டும் ஒன்றே என்பது உருவகம்.
*  வடக்கு என்னும் திசை பெயரோடு பிற திசைகள் வந்து சேரும்போது நிலைமொழி ஆறும் மெய்யும் நீங்கும்.
*  மேற்கு+நாடு என்பது மேனாடு எனச் சேரும்.
*  கருமை+குழி என்பது ஈறுபோதல், இனமிகல் எனும் விதிகளின்படி புணரும்.
*  அடிஅகரம் ஐ ஆதல் – பைங்கூழ்
*  ஆதி நீடல் – மூதூர்
*  இனமிகல் கரும்பலகை, தன்னொற்றிரட்டல் வெற்றிலை
*  மரம்+அடி என்பது மரவடி எனச் சேரும்.
*  வட்டக்கல் என்பது மகர ஈற்றுப் புணர்ச்சி
*  பொருள் என்பது ஒழுக்கமுறை பொருள் இலக்கணம் இரு வகைப்படும்.
*  அன்புடைய தலைவன், தலைவி பற்றிய ஒழுக்கத்தினை கூறுவது அகத்தினை எனப்படும். அகத்தினை ஏழு வகைப்படும்.
*  அகப்பொருளுக்குரிய பொருள்கள் மூன்று
*  நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
*  அகம், புறம் ஆகிய இரண்டும் பொருள் இலக்கணம்.

Leave a Comment