TNPSC - Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER)-2. - Tamil Crowd (Health Care)

TNPSC – Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER)-2.

 TNPSC – Study Materials-GROUP-4, VAO , TAMIL (QUESTION/ ANSWER)-2.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை 

1. அன்பிலார் – எல்லாம் தமக்குரியர்

2. அன்புடையார் – என்பும் உரியர்

3. அன்பு ஈனும் – ஆர்வமுடைமை

4. அன்பின் வழியது – உயர்நிலை

1. பேதை -அறியாதவன்

2. ஏதம் – கேடு

3. இயைவு – பொருத்தமாக

4. வாவி – குளம்

5. அவா – ஆசை

6. அவலம் – துன்பம்

7. வெகுளி – கோபம்

8. மாரி – மழை

9. நரை – தேன்

10. மாடு – செல்வம்

11. படை – அடுக்கு

12. தாபனம் – பிரதிட்டை

1. நகை – முகமலர்ச்சி

2. உவகை – அகமகிழ்ச்சி

3. இசை – புகழ்

4. வசை – பழி

1. வேரல் – மூங்கில்

2. திங்கள் – சந்திரன்

3. ஞாயிறு – கிதரவன்

4. ஆரம் – மாலை

1. குறிஞ்சி -மலை

2. முல்லை – காடு

3. மருதம் – வயல்

4. நெய்தல் – கடல்

1. ஓ – நீர் தங்கும் பலகை

2. மா – திருமகள்

3. கா – சோலை

4. தீ – கோபம்

1. கரி – யானை

2. பரி – குதிரை

3. அரி – சிங்கம்

4. புரி – கயிறு

5. நாண் – கயிறு

6. செரு – போர்

7. இகல் – பகை

8. புவனம் – உலகம்

9. பொருப்பு – மலை

10. புள் – அன்னம்

11. குலவு – விளங்கும்

12. மேழி – கலப்பை

13. ஒல்லை – விரைவு

14. ஊ – ஊன்

15. ஐ- தலைவன்

16. நொ – துன்புறு

17. தே – கடவுள்

1. சுரத்தல் – பெய்தல்

2. உள்ளம் – ஊக்கம்

3. வேலை – கடல்

4. நல்குரவு – வறுமை

1. ஊண் – உணவு

2. ஊன் – இறைச்சி

3. கலி – சனி

4. களி – மகிழ்வு

1. வருவான் – எதிர்கால இடைநிலை

2. காணான் – எதிர்மறை இடைநிலை

3. பார்த்தான் – இறந்தகால இடைநிலை

4. நடக்கிறான் – நிகழ்கால இடைநிலை

1. குறிஞ்சி – குறவன்

2. முல்லை – ஆயன்

3. மருதம் – உழவன்

4. நெய்தல் – பரதன்

1. Fanfare – எக்காள முழக்கம்

2. Fangle – நாகரிகம்

3. Fantail – வீட்டுப் புறா

4. Facile – இணக்குமள்ள

1. Camphor – கற்பூரம்

2. Chide – சலசலப்பு

3. Chaos – கலவரம்

4. Canard – பொய்க்கதை

1. மேப்பு இலை – அம்மன்

2. அரசு இலை – விநாயகர் இலை

3. துளசி இலை – விஷ்ணு கடவுள்

4. வில்வ இலை – சிவன்

1. காளை மாடு – சிவபெருமான

2. எலி – விநாயகர்

3. மயில் – முருகன்

4. எருமை – எமன்

1. திங்கள் – மாதம்

2. வேந்தர் – அரசர்

3. வானம் – ஆகாயம்

4. வின்மீன் – நட்சத்திரம்

1. பண்புத்தொகை – வெஞ்சுடர்

2. வினைத்தொகை – செய்தொழில்

3. உவமைத்தொகை – மலர்கை

4. உம்மைத்தொகை – காய்கறி

1. கண் வனப்பு – கண்ணோட்டம்

2. எண் வனப்பு – இத்துணையாம்

3. பண் வனப்பு – கேட்டார் நன்றென்றால்

4.. கால் வனப்பு – செல்லாமை

1. மதுரை – கடம்பவனம்

2. திருநெல்வேலி – வேணுவனம்

3. சிதம்பரம் – தில்லைவனம்

4. திருவிடைச்சுரம் – திருவடி சூலம்

1. தேரா மன்னா செப்புவது உடையேன் – கண்ணகி

2. தீயும் கெல்லாத் தீவினை யாட்டினேன் – ஆதிரை

3. சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக – மணிமேகலை

4. சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் – கோவலன்

1. யாதும் ஊரே யாவரும் கேளிர் – கனியன் பூங்குன்றன்

2. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருவது – நாமக்கல் கவிஞர்

3. தேனொக்கும் செந்தமிழே நீ கனி – பாரதியார்

1. குண்டலகேசி நாதகுத்தனார்

2. சீவகசிந்தாமணி – திருக்கத்ததேவர்

3. மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்

4. முவருலா – ஜெயம்கொண்டார்

1. திருக்கோவையார் – மாணிக்கவாசகர்

2. திருப்பாவை – ஆண்டாள்

3. கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்

4. பெரியபுராணம் – சேக்கிழார்

1. சிலப்பதிகாரம் – குடிமக்கள் காப்பியம்

2. மணிமேகலை – சீர்திருத்தக் காப்பியம்

3. சீவகசிந்தாமணி – வருணனைக் காப்பியம்

4. குண்டல கேசி – சொற்போர் காப்பியம்

1. களவழி நாற்பது – புறப்பொருள்

2. முதுமொழிக் காஞ்சி – நிலையாமை

3. நாலடியார் – வேளாண் வேதம்

4. ஏலாதி – ஆறு மருந்து

1. பேதையா நட்பு – தேய்பிறை

2. பண்புடையார் தொடர்பு – நலில் தோறும்

3. அறிவுடையார் நட்பு – வளர்பிறை

4. இடுக்கண் களையும் நட்பு – உடுக்கை இழந்த கை

1. உமறுப்புலவர் – முதுமொழிமாலை

2. கம்பர் – சிலை எழுபது

3. திருக்கத்தேவர் – நரிவிருத்தம்

4. வீரமாமுனிவர் – தென்னூல் விளக்கம்

1. கல்கி – சிவகாமியின் சபதம்

2. சாண்டில்யன் – கடல் புறா

3. நா.பார்த்தசாரதி – குறிஞ்சி மலர்

4. அகிலன் – பாவை விளக்கும்

1. வைகறை மேகங்கள் – கவிஞர் வைரமுத்து

2. கவிதை மேகங்கள் – மு.பி.பாலசுப்பிரமணியன்

3. மலைக்கள்ளன் – நாமக்கள் கவிஞர்

4. சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

1. பம்மல் சம்மந்த முதலியார் – மனோகரா

2. தி.க. சண்முகம் – இராஜராஜ சோழன்

3. அறிஞர் அண்ணா – சந்திரோதயம்

4. மனோகரன் – இலங்கேஸ்வரன்

1. திரிகடுகம் – நல்லாதனார்

2. குமரகுருபரர் – நான்மணிமாலை

3. திருக்குறள் – திருவள்ளுவர்

4. இராமயணம் – கம்பர்

1. ஆதி உலா – சேரமான் பெருமாள் நாயனார்

2. திருவிரட்டை மணி மாலை – காரைக்காலம்மையார்

3. குண்டலகேசி – நாதகுத்தாதனார்

4. திருவாய்மொழி – நம்மாழ்வார்

5. தேவாரம் – திருஞான சம்பந்தர்

1. முப்பால் – திருக்குறள்

2. தொல்காப்பியம் – தொல்காப்பியர்

3. மகாபாரதம் – வியாசர்

4. தமிழ் முதற்காப்பியம் – சிலப்பதிகாரம்

5. திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பி

6. எழிலோவியம் – வாணிதாசன்

7. திரிகடுகம் – நல்லாதனார்.

8. பெண்மதிமாலை – வேதநாயகம்பிள்ளை

9. மூவருலா – ஒட்டக்கூத்தர்

10. நான்மணிக்கடிகை – விளம்பி நாகனார்

1. இரட்சணியக் குறள் – எச்.ஏ.கிருஷ்ணப் பிள்ளை

2. குடும்ப விளக்கு -கனக சுப்பிரத்தினம்

3. ஞானரதம் – தேசியக்கவி

4. இயேசு காவியம் – கண்ணதாசன்

5. பெண்மை வெல்க – திருமதி. செளந்தரா கைலாசம்

6. வ.உ.சி – திலகரின் வாழ்க்கை வரலாறு

7. கண்ணதாசன் – மாங்கனி

8. திரு.வி.க – பெண்ணின் பெருமை

9. அப்துல் ரகுமான் – முட்டைவாசிகள்

1. வீரமாமுனிவர் – அயர்லாந்து

2. கால்டுவெல் – இத்தாலி

3. சீகன்பால்கு – ஜெர்மன்

4. எ.ஏ.கிருஷ்ணப்பிள்லை – தமிழ்நாடு

1. நீதிதேவன் மயக்கம் – அறிஞர் அண்ணா

2. பராசக்தி – கலைஞர் மு.கருணாநிதி

3. நாற்காலிக்காரர்கள் – ந.முத்துச்சாமி

4. பசி – இந்திரா பார்த்தசாரதி

1. க.நா.சுப்பிரமணியன் – பொய்த்தேர்வு

2. அசோகமித்ரன் – தண்ணீர்

3. சா.கந்தசாமி – சாயாவனம்

4. சி.சு.செல்லப்பா – வாடிவாசல்

1. சிற்பி – சூரிய நிகழல்

2. ஞானக் கூத்தன் – அன்று வேறு கிழமை

3. ஈரோடு தமிழன்பன் – தோணி வருகிறது

4. புவியரசு – இதுதான்

1. முக்கூடற்பள்ளு – ஆசிரியர் பெயர் தெரியவில்லை

2. பழமொழி – முன்றுறையரையனார்

3. இருண்ட வீடு – பாரதிதாசன்

4. ஏலாதி – கணிமேதாவியர்

1. திருவாசகம் – மாணிக்கவாசகர்

2. திருப்பாவை – ஆண்டாள்

3. பெண்ணின் பெருமை – திரு.வி.க

4. தேவாரம் – திருஞானசம்பந்தர்

1. பாஞ்சாலி சபதம் – பாரதியார்

2. பாண்டியன் பரிசு – பாரதிதாசன்

3. அர்த்தமுள்ள இந்துமதம் – கவியரசு கண்ணதாசன்

4. கள்ளிக்காட்டு இதிகாசம் – கவிஞர் வைரமுத்து

1. பாரி – கபிலர்

2. அதியமான் – ஒளவையார்

3. கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார்

4. குமணன் – பெருஞ்சித்திரனார்

1. பூங்கொடி முடியரசன்

2. தேம்பாவணி – வீரமாமுனிவர்

3. குகன் – வேடர் தலைவன்

4. பரதன் – இராமனின் இளவல்

5. சந்திரன் – தேர்வல்லான்

6. கம்பன் – கல்வியிற் பெரியன்

1. தமிழ்த்தென்றால் – திரு.வி.கலியாணசுந்தரம்

2. தனித்தமிழ் வித்கர் – மறைமலையடிகள்

3. சொல்லின் செல்வர் – இரா.பி.சேதுப்பிள்ளை

4. தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்

1. புவனேஸ்வரி – சுவாமி விவேகானந்தரின் தாய்

2. திலகவதியார் – திருநாவுக்கரசரின் தமக்கை

3. ஞானக்கலாம்மையார் – பட்டினத்தாரின் தாய்

4. சாரதாம்மாள் – இராமகிருஷ்ணரின் மனைவி

மரபு கவிதை தொடர்புடையவை:

1. கண்ணதாசன்

2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

3. சுரதா

கண்ணதாசன்

வாழ்க்கைக் குறிப்பு:

இயற்பெயர் – முத்தையா

ஊர்: இராமநாதாபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டு (தற்போது சிவகங்கை மாவட்டம்)

பெற்றோர் – சாத்தப்பான் -விசாலட்சுமி

காலம்: 1927 – 1981

புனைப்பெயர்:

-காரை முத்துப் புலவர்

-வணங்காமுடி

-பார்வதிநாதன்

-துப்பாக்கி

-ஆரோக்கியசாமி

-கமகப்பரியா

-ஆரோக்கியசாமி

வேறு பெயர்கள்:

-கவியரசு

-கவிச்சக்கரவர்த்தி

-குழந்தை மனம் கொண்ட கவிஞர்

படைப்புகள்:

-மாங்கனி

-ஆட்டனத்தி ஆதி மந்தி

-கல்லக்குடி மகாகாவியம்

-கவிதாஞ்சலி

-பொன்மலை

-அம்பிகா

-அவகுதரிசனம்

-பகவாத் கீதை விளக்கவுரை

-ஸ்ரீகிருஷ்ணகவசம்

-அர்த்தமுள்ள இந்துமதம்

-பரிமலைக் கொடி

-சந்தித் தேன் சிந்தித்தேன்

-அனார்கலி

-தெய்வதரிசனம்

-பேனா நாட்டியம்

-இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காவியம்)

புதினங்கள்:

-ஆயிரம் தீவு அங்கையற்கண்ணி

-வேலங்குடி திருவிழா

-சேரமான் காதலி

இதழ்:

-தென்றல்

-கண்ணதாசன்

-சண்டமாருதம்

-முல்லை

-தென்றல் திரை

-கடிதம்

-திருமகள்

-திரை ஒளி

-மேதாவி

-தமிழ் மலர்

குறிப்பு:

-திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல் எழுதியுள்ளார்.

-இவர் கடைசியாக எழுதிய பாடல் ஏசுதாஸ் குரலில் அமைந்த “கண்ணே கலைமானே” பாடலாகும்.

-சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்

-பாடல்களின் எண்ணிக்கை 5000க்கும் மேல்

சிறப்பு:

-தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்

-செளந்திரா கைலாசம்- தடுமாறும் போதையிலும் கவிபாடும் மேதை அவன்

மேற்கோள்:

– காலைக் குளித்தெழுந்து

 கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு

 கருநாகப் பாம்பெனவே

 கார்கூந்தல் பின்னலிட்டு

– போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித்

தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்

– வீடு வரை உறவு, வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?

– மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்

மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?

– “செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன்” என்று பாடியவர் – கண்ணதாசன்

– கம்பர்-அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் – இராச தண்டனை

– சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசனின் வரலாற்றுப் புதினம் – “சேரமான் காதலி”

2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

– பெற்றோர்: அருணாசலம் – விசாலாட்சி தம்பதியருக்கு இளைய மகன்

– ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு

– காலம்: 13.04.1930 – 08.10.1959

– மனைவி: கெளரவாம்பாள்

– குழந்தை: 1959-ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. அவருக்கு குமரவேல் என பெயர் சூட்டப்பட்டது. அதே ஆண்டு கல்யாண சுந்தரம் மரணம் அடைந்தார்.

– படிப்பு: பள்ளிப்படிப்பு மட்டுமே

– இவர் எழுத்திய மொத்த பாடல்களின் எண்ணிக்கை – 56

– இவரை “மக்கள் கவிஞர், பொதுவுடமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்” எனப் போற்றுவர்.

– உடுமலை நாராயணகவி இவரை “அவர் கோட்டை நான் பேட்டை” எனப் புகழ்ந்தார்.

– செய்யும் தொழிலே தெய்வம் என்று பாடினார்.

– 1955-ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

– “கையும் காலுந்தான் உதவி, கொண்ட கடைமைதான் நமக்குப் பதவி” என்று கூறினார்.

– “பயிரை வளர்த்தால் பலனாகும் – அது உயிரைக் காக்கும் உணவாகும்” என்று பாடினார்.

– “வெயிவே நமக்குத் துணையாகும் – இந்த வேர்வைகள் எல்லாம் விதையாகும்” என்று கூறினார்.

– ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.

– எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும்.

– இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

– திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

– நடிப்பாசையின் காரணமாக “சக்தி நாடக சாபா”வில் இணைந்தார்.

– பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்க அரசு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மணிண்டபம் அமைத்துள்ளது. அங்கு அவரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.

3. சுரதா

வாழ்க்கைக் குறிப்பு:

இயற்பெயர்: இராசகோபாலன்

ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் பழையனூர் (சிக்கல்)

பெற்றோர்: திருவேங்கடம், சண்பகம் அம்மையார்

படிப்பு: பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார்.

மனைவி: சுலோசனா

மகன்: கல்லாடன்; மருமகள்: இராசேசுவரி கல்லாடன்

பேரக்குழந்தைகள்: இளங்கோவன், இளஞ்செழியன்

– சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

காலம்: 23.11.1921 – 19.06.2006

சிறப்புப்பெயர்கள்:

– உவமைக் கவிஞர் (ஜெகசிற்பியன்)

– கவிஞர் திலகம் (சேலம் கவிஞர் மன்றம்)

– தன்மானக் கவிஞர் (மூவேந்தர் முத்தமிழ் மன்றம்)

– கலைமாமணி (தமிழக இயலிசை நாடக மன்றம்)

– கவிமன்னர் (கலைஞர் கருணாநிதி)

படைப்புகள்:

– தேன்மழை (கவிதைத் தொகுதி, தமிழ் வளர்ச்சி கழகப் பரிசு 1986)

– சிரிப்பின் நிழல் (முதல் கவிதை)

– சாவின் முத்தம்

– உதட்டில் உதடு

– பட்டத்தரசி

– சுவரும் சுண்ணாம்பும் – 1974

– துறைமுகம் – 1976

– வார்த்தை வாசல்

– எச்சில் இரவு

– அமுதும் தேனும்

– தொடா வாலிபம்

கட்டுரை: “முன்னும் பின்னும்”

இதழ்:

– சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம். இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச் மாதம் வெளியிட்டார்.

– 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார்.

– 1954-இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார்.

– 1955- இல் காவியம் முதல் கவிதை என்ற வார இதழைத் தொடங்கினார்.

– இவ்விதழைத் தொடர்ந்து மாத இதழாக இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

– 1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).

குறிப்பு:

– பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

– தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.

மேற்கோள்:

– தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்

– “தடைநடையே அவர் எழுத்தில் இல்லை

வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கணுக்கல் உண்டு”

– படுக்கவைத்த வினாக்குறி போல்

மீசை வைத்த பாண்டியர்கள்

– வரலாற்றுப் பேரழகி ஆதிமந்தி

எதுகை வரப் போல் அடுத்து வந்தால், அத்தி

என்பானணோ மோனையைப் போல் முன்னை வந்தான்

– திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் – கு.ச.கிருட்டிணமூர்த்தி

– 1944-ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார்.

– சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், ‘அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு’, மற்றும் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’ ஆகியவை. 100க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

– பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

சிறப்பு:

– செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்

– தமிழக அரசின் முதல் பாவேந்தர் நினைவுப் பரிசை பெற்றவர்

– வ.ரா(வ.ராமசாமி) மாற்றொரு பாரதி பிறந்து விட்டான்

– 1969-இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.

– 1972-இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.

– 1978-இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.

– தமிழக அரசு சுரதாவின் நூல்களை நாட்டுடைமையாக்கி அவர் குடும்பத்திற்குப் பத்து இலட்சம் உரூவா பரிவுத்தொகை வழங்கியுள்ளது(2007).

– 1982 இல் சுரதாவின் மணிவிழாவையொட்டி நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடந்த விழாவில் ரூபா அறுபதாயிரம் பரிசாகத் தரப்பெற்றது.

– 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.

– 1987 இல் மலேசியாவில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பெற்றார்.

– 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.

– 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.

– சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.

– 29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.

– சுரதாவின் கவிதைகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

– சுரதாவின் கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

– இவர் தன்னுடைய 84-ஆம் வயதில் 20.06.2006 அன்று சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.

Leave a Comment