TNPSC - Important Study Material. 10th History Full Test, POLITY - இந்திய அரசியலமைப்பின் தன்மைகள், - Tamil Crowd (Health Care)

TNPSC – Important Study Material. 10th History Full Test, POLITY – இந்திய அரசியலமைப்பின் தன்மைகள்,

TNPSC – Important Study Material. 10th History Full Test,  POLITY – இந்திய அரசியலமைப்பின் தன்மைகள்,  

1)சமத்துவ சமாஜம் யாரால் நிறுவப்பட்டது  

A ) அயோத்திதாசர் B ) ஐயா வைகுண்டர் C ) வள்ளலார் D ) அய்யன் காளி  

2)உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்ட ஆண்டு 

A ) 1856  B ) 1829 C ) 1830 D ) 1828 

3)பிரார்த்தனை சமாஜ் தொடங்கப்பட்ட ஆண்டு 

A ) 1829 B ) 1895 C ) 1867 D ) 1828

4)ராமகிருஷ்ணா மிஷன் தொடங்கப்பட்ட ஆண்டு 

A ) 1893 B ) 1895 C ) 1897 D ) 1898 

5)சுத்தி இயக்கத்துடன் தொடர்புடையவர். 

A ) தயானந்த சரஸ்வதி B ) விவேகானந்தர் C ) ராஜாராம் மோகன்ராய் 

D ) இவற்றுள் யாருமில்லை 

6)சாம்பிரான் பகுதியில் பயிரிடப்பட்ட செடி 

A ) இண்டிகோ செடி B ) கோதுமை செடி C ) பருத்திச் செடி D ) சணல் செடி 

7)அகமதாபாத் பஞ்ச் போராட்டம் நடைபெற்ற ஆண்டு 

A ) 1918  B ) 1920  C ) 1921  D ) 1925 

8)கேடா சத்தியாகிரக போராட்டம் இதனை மையமாகக் கொண்டு செயல்பட்டது . 

A ) ஊதிய உயர்வு B ) நில வரி தள்ளுபடி செய்தல் 

C ) கருப்புச் சட்டம் தொடர்பாக D ) புரட்சித் தொடர்பாக 

9)ஆபிரகாம் பண்டிதர் எங்கு சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை நிறுவினார் .

A ) மதுரை B ) தஞ்சாவூர் C ) திருவாரூர் D ) மயிலாடுதுறை 

10)இந்தியாவில் முதல் தொழில் சங்கம் எங்கே தொடங்கப்பட்டது . 

A ) பாம்பே B ) கல்கத்தா C ) புனே D ) சென்னை 

11)M .G ரானடே பற்றி தவறான கூற்று எது . 

A ) ரானடே ஒரு நீதிபதி ஆவார் B ) அவரது காலகட்டம் ( 1842- 1901 ) 

C ) வேதங்களை ஆதரித்தார் D ) தக்காண கல்வி கழகம் 1884 – ல் தொடங்கினார் 

12)ஜீவனே சிவன் எனக் கூறியவர் . 

A ) விவேகானந்தர் B ) பரமஹம்சர் C ) தயானந்த சரஸ்வதி D ) இவற்றுள் யாருமில்லை 

13)நவீன இந்தியாவின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் . 

A ) விவேகானந்தர்  B ) அன்னிபெசன்ட் C ) காந்தி D ) ராஜாராம் மோகன்ராய் 

14)அனைவரையும் தலைப்பாகை அணிய சொன்னவர் . 

A ) வள்ளலார் B ) அயோத்திதாசர் C ) ஐயா வைகுண்டர் D ) நாராயண குரு 

15)குலாம்கிரி யாருடைய நூல் 

A ) நாராயண குரு B ) அய்யன் காளி C ) ஜோதிபாபூலே D ) M.G ரானடே

10th History Full Test:

10th History Full Test-click here

POLITY – இந்திய அரசியலமைப்பின் தன்மைகள்!

இந்திய அரசியலமைப்பின் தன்மைகள்


 1 . கூட்டாட்சி ( கூட்டாட்சி போல்வு ) : கூட்டாட்சி என்பது மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது ( அதாவது ஒரு நிலப்பரப்பை இரு அரசாங்கங்கள் ஆட்சி செய்வது )
2 . அதிகாரப்பகிர்வு : அதிகாரப் பகிர்வு என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன .
3 . அரசியலமைப்பின் மேலாண்மை : இந்தியாவில் மிக உயர்ந்தது இந்த சட்டம் இது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பதை குறிக்கிறது .
4 . எழுதப்பட்ட அரசியலமைப்பு : அரசியலமைப்புச் சட்டம் இயற்ற ஒரு குழு அமைத்து தனியாக ஒரு ஆவணமாக உள்ளது . நாட்டில் உள்ள அனைத்துச் சட்டங்களும் இதற்கு உட்பட்டு இருக்க வேண்டும் .
5 . நீதிமன்றங்களின் அதிகாரம் : இந்தியாவின் மூன்று அதிகார அமைப்புகளான சட்டமியற்றும் துறை , செயல்படுத்தும் துறை (நிர்வாகத் துறை) நீதித்துறை ஆகியவற்றில் , நீதித்துறையானது மற்ற இரு துறைகளின் செயல்பாடுகளை , அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறதா என்று கவனிக்கிறது . இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி சட்டம் இயற்றப்பட்டாலோ அல்லது செயல்பட்டாலோ அதை செல்லாது என்று அறிவிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது .
6 . ஒன்றையாட்சி அரசியலமைப்பு :வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இந்தியா பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் , அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரே ஒரு அரசியலமைப்புச் சட்டம் உள்ளது .

Leave a Comment