TNPSC பல்வேறு வேலைவாய்ப்புகள்- விண்ணப்பிக்க 24.09.2021 கடைசி தேதி..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது இந்த ஆணையம் மூலம் Assistant Geologist, Assistant Public Prosecutor, ITI Principal மற்றும் Assistant Director of Training பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் : TNPSC
பணியின் பெயர்: Assistant Geologist, ITI Principal & Assistant Director of Training, Assistant Public Prosecutor
பணியிடங்கள்: 26
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை: Online
காலிப்பணியிடங்கள்:
ஒருங்கிணைந்த புவியியல் துணை சேவை தேர்வுகள் மூலம் Assistant Geologist பதவிக்கு 26 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கு 50 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
ITI Principal & Assistant Director of Training பதவிக்கு 06 பணியிடங்கள் என, மொத்தம் 82 காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது Assistant Geologist பதவிக்கு 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
ITI Principal & Assistant Director of Training பதவிக்கு 24 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.
அரசு வழக்கறிஞர் பதவிக்கு 34 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:
Assistant Public Prosecutor – BL Degree
Assistant Geologist – Degree/ M. Sc degree
ITI Principal & Assistant Director of Training – Degree in Engineering/ Technology
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு கட்டணம்:
பதிவு கட்டணம்: ரூ.150/-
தேர்வு கட்டணம்: ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை:
அரசு பணிக்கு காத்திருக்கும் பட்டதாரிகள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 24.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.