TNPSC- செயலராக உமா மகேஸ்வரி நியமனம்..!!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC)செயலராக அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பல்வேறு அரசு பொறுப்புகளுக்கான ஆட்சிப்பணி அதிகாரிகளைத் தொடர்ச்சியாக பணியிடமாற்றம் செய்துவருகிறது. அதன்படி, 24 மாவட்டங்களுக்குப் புதிய மாவட்ட ஆட்சியாளர்களை அண்மையில் அரசு அறிவித்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியாளர்கள் அரசு நிர்வாகப் பொறுப்புகளுக்குப் பணியிடம் மாற்றப்பட்டு வருகின்றனர்.இந்த வரிசையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த உமா மகேஸ்வரி தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தச் செய்தியையும் படிங்க…
மக்களின் நலன் கருதி CORONA கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்..!!
இதுகுறித்து, தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணைய ஒழுங்குமுறைகளின் கீழ் ஒழுங்குமுறை 8(1)ன் படி மேதகு ஆளுநர் ஒப்புதலுடன், இதுநாள்வரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்துவரும் உமா மகேஸ்வரி IAS, இனி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின்(TNPSC) செயலராக நியமிக்கப்படுகிறார். அவரது துணைச் செயலராக நந்தகுமார் பொறுப்பில் இருப்பார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.