பொது அறிவு வினா விடை: இலக்கியம்
1) 160 புலவர்கள் எழுதிய ஓர் இலக்கியம் எது?
அகநானூறு
2) 2007 -ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
மு. மேத்தா
3)”கல்வியில் பெரியவர் “என்று பாராட்டப்படுபவர் யார்?
கம்பர்
4)” நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் நாலும் என்ற சொல் உணர்த்தும் நூல் எது?
நாலடியார்
5)” தீதும் நன்றும் பிறர் தர வாரா “என்று பாடியவர் யார்?
கணியன் பூங்குன்றனார்
6)” தொண்டர் சீர் பரவுவார் “என பாராட்டப்படும் சான்றோர் யார் ?
சேக்கிழார்
7)” வள்ளலார்” என்ற தொடரால் குறிக்கப்படும் சான்றோர்?
ராமலிங்க அடிகளார்
8)”கம்ப்யூட்டர்” என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் எது ?
கணிப்பொறி
9)” டீ பார்ட்டி” என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் எது?
தேனீர் விருந்து
10) ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற பிரபலமான பொன்மொழி சொந்தக்காரர் யார் ?
சுவாமி விவேகானந்தர்
11)தமிழ் புதுக்கவிதையின் தந்தை யார்?
நா. பிச்சமூர்த்தி
12)” குட்டி திருவாசகம்” என்று அழைக்கப்படும் நூல் எது?
திருக்குருகை
13)” வங்க இலக்கியத்தின் தந்தை” என்று அழைக்கப்பட்டவர் யார்?
தாகூர்
14) திருக்குறளின் மற்றொரு பெயர் என்ன?
வாயுறைவாழ்த்து
15) இந்திய மொழிகளில் முதல் நூல் வெளியான மொழி எது?
தமிழ்
16) கம்ப்யூட்டர் பற்றி தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் யார்?
சுஜாதா
17)”தமிழ் மாப்பசான் “என்று புகழப்படுபவர் யார்?
ஜெயகாந்தன்
18) எந்த ஆண்டு முதன் முதலில் கின்னஸ் புத்தகம் வெளியானது?
1954
19) உலகின் முதல் பொருளாதார நூல் எது ?
அர்த்த சாஸ்திரம் -சாணக்கியர்.
20)இந்திய தேசிய கீதத்தில் எத்தனை வரிகள் உள்ளன?
13 வரிகள்
21)” தமிழ் நாடகத் தந்தை” என்று புகழப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்த முதலியார்
22)”தமிழ் உரைநடையின் தந்தை” என்று புகழப்படுபவர் யார் ?
வீரமாமுனிவர்
23)”ஆங்கிலச் அச்சுக் கலையின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார் ?
வில்லியம் காக்ஸ்டன்
24)” கவிஞர்களின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?
ஹோமர்
25)”வாழத் துணிந்தால் வறுமை அகலும்” என்று பாடிய தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் யார்?
கவியரசு. கண்ணதாசன்
26)இந்தியாவில் வெளியான முதல் அரசியல் பத்திரிகை எது?
இந்தியன் ஹரால்ட்
27) பாரதியார் பணியாற்றிய முதல் பத்திரிகை எது?
பாலபாரதம்
28) உலகின் முதல் நாவல் எந்த மொழியில் வந்தது?
ஜப்பான்
29)தமிழ் மொழியில் முதன் முதலில் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ?
அகிலன்
30) காந்திஜி தன் சத்திய சோதனையை எம்மொழியில் எழுதினார்?
குஜராத்தி
31)முதன் முதலில் தமிழ் அகராதியை தொகுத்தவர் யார்?
வீரமாமுனிவர்
32) தமிழில் நிறுத்தற்குறிகள், சிறு சிறு வாக்கியங்கள், எளிய தூய தமிழ் நடை இவற்றை அறிமுகப்படுத்திய முதல் பத்திரிகை எது ?
தேசபக்தன்
33) தமிழர்களின் பொது அறிவை வளர்க்க வந்த முதல் இதழ்?
ஜன வினோதினி
34) இந்திய புராணங்கள் எத்தனை ?
18
35)தமிழில் முதன்முதலில் வெளிவந்த வரலாற்று நாவல் எது?
மோகனாங்கி
36) தமிழன் முதல் விடுதலை புத்தகம் எது ?
இரு சொல் அலங்காரம்
37)பாரதியார் குழந்தைகளுக்காக நடத்திய ஒரே பத்திரிகை எது ?
பால வினோதினி
38)தமிழில் உள்ள அணி வகைகள் எத்தனை ?
35
39) உலகிலேயே கலைக்களஞ்சியம் முதன்முதலில் எந்த நாட்டில் தோன்றியது?
இந்தியாவில்
40)முதல் கலைக்களஞ்சியம் எம்மொழியில் வெளிவந்தது?
வங்காள மொழி
41) ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன?
மாலை பாடல்கள்
42) திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
83 மொழிகள்
43)” வந்தே மாதரம்” என்னும் பாடல் எந்த புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது ?
ஆனந்தமடம்
44)” காதை” என்றால் என்ன ?
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு
45)தமிழ் சிற்றிலக்கியங்கள் எத்தனை?
96
46) உலக எழுத்தாளர்களில் ஆயிரத்துக்கும்(1,000) மேற்பட்ட நாவல்கள் எழுதியவர் யார்?
ராஜேஷ்குமார்
47)தமிழில் வெளிவந்த முதல் வாழ்க்கை வரலாறு நூல் எது ?
அச்சுதானந்த சுவாமிகள்- வரலாறு
48) பிரிட்டன் வழங்கும் மிக உயர்ந்த விருதின் பெயரென்ன ?
நைட்வுட்
49)தனது முதல் நாவலுக்கு புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார்?
அருந்ததிராய்
50) தமிழகத்தில் முதன்முதலாக திறக்கப்பட்ட கட்டணமில்லாத நூல்நிலையம் இது?
கன்னிமாரா நூலகம்
51) உலகிலேயே மிக சிறிய புத்தகம் எது?
உமர்கய்யாம் காவியம்
52) தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள பனை ஓலை சுவடிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
40,000
53) உலகிலேயே முதன் முதலில் தோன்றிய இலக்கியம் எது?
ராமாயணம்
54) இந்திய கவிஞர்களில் மாஸ்கோவில் சிலை வைக்கப்பட்டவர் யார் ?
தாகூர்
55) தேசபக்தியை அடிப்படையாகக் கொண்டு துப்பறியும் நாவல் எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் யார்?
அமரர் .தமிழ்வாணன்
56) இந்தியாவில் முதல் கலைக்களஞ்சியம் வெளிவந்த மொழி எது?
வங்காள மொழி
57) சேக்கிழாருக்கு கோயில் இங்கு உள்ளது ?
குன்றத்தூர்
58) தமிழின் முதல் பெண் கவிஞர் யார்?
காக்கைபாடினியார்
59)பகவத்கீதையில் எத்தனை பாகங்கள் உள்ளன ?
18 பாகங்கள்
60)தமிழின் முதல் நூல்?
அகத்தியம்
61) முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடந்தது?
மலேசியா
62)”மோனை” என்றால் என்ன?
சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வருவது
63) இந்தியாவின் முதல் தமிழ் மொழி பத்திரிகையின் பெயர் என்ன?
மெட்ராஸ் கூரியர்
64)”எதுகை” என்றால் என்ன?
சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
65) சைவ சமய குரவர் நால்வரில் முதலில் வைத்துப் போற்றத் தக்கவர் யார் ?
திருஞானசம்பந்தர்
66)திருஞானசம்பந்தரின் சொந்த ஊர் எது?
சீர்காழி
67)”அமர் சோனார் பங்களா..” என்ற பங்களாதேஷின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?
தாகூர்
68)பஞ்சதந்திர கதைகளை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?
தாண்டவராய முதலியார்
69)திருவள்ளுவருக்கு” ஐயயன்” என்று அடைமொழி கொடுத்தவர் யார்?
கலைஞர் மு. கருணாநிதி
70) நவீன துப்பறியும் மர்ம கதைகளின் முன்னோடி என்று அழைக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் யார்?
சிரஞ்சீவி
71) தாகூருக்கு நைட்வுட் பட்டம் எப்போது கிடைத்தது?
1915
72)ஜல்லிக்கட்டு என்றால் என்ன?
மாட்டின் கழுத்தில் கட்டப்படும் வளையல்
73) ரஷ்ய புரட்சியைப் பற்றி முதன் முதலில் கவிதை பாடியவர் யார் ?
பாரதியார்
74)திருக்குறளை முதன்முதலில் நூலாக அச்சிட்டு வெளியிட்டவர் யார்?
ஞானபிரகாசம்
75)தமிழில் குழந்தை இலக்கியம் என்று போற்றப்படும் நூல் எது?
பிள்ளைத்தமிழ்
76) சிறந்த இலக்கிய படைப்பாளர்களுக்கு கொடுக்கப்படும் விருது எது?
சாகித்திய அகாதமி விருது
77) காளிதாசன் இயற்றப்பட்ட நூல் எது?
இரகுவம்சம்
78)”சாகித்ய அகாடமி” விருது பெற்ற முதல் தமிழ் நாவல் எது?
அலையோசை
79) திருக்குறளில் அதிக அதிகாரம் உள்ளது எது?
பொருட்பால்
80) அச்சில் உருவான முதல் நூல் எது?
பைபிள்
81) இந்திய மொழியில் முதன் முதலில் நூல் அச்சானது எந்த மொழியில்?
தமிழ்
82)கரன்சி நோட்டுகளில் எழுத்தாளர்களின் உருவங்களை பொரித்து அவர்களை பெருமைப்படுத்திய முதல் நாடு எது?
ஜப்பான்
83)ஷேக்ஸ்பியர் எழுதிய மொத்த நாடுகள் எத்தனை?
38
84) இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆசிய நாடு எது?
இந்தியா
85)சரித்திர நாவல்கள் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்?
சாண்டில்யன்