TNElection2021Result: தபால் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியது..!!
5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான இன்று நடைபெறுகிறது. 5 மாநிலத்திற்கும் தேர்தல் முடிவுகள் ஒரேநாளில் மே 2 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் விதிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தின் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன.
இந்த செய்தியையும் படிங்க……
ஸ்டாலின் அமைச்சரவையில்- இந்த 3 சமூகங்களுக்குத்தான் முக்கியத்துவம்..!!
75 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையின் முதல் படியாக இருக்கும், தபால் வாக்குகள் என்னும் பணிகள் தொடங்கிவிட்டது. தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர், மின்னணு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படும்.