Super Policy ;LIC-ல் ரூ.76 முதலீட்டில் ரூ.10 லட்சம் வரை லாபம்..!!
கடைசி காலத்தில் அனைவரும் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பாலிசி ஒன்றை எல்ஐசி அறிமுகப்படுத்தியுள்ளது.
LIC ஜீவன் ஆனந்த் பாலிசி :
இத்திட்டத்தின் மூலம் தினமும் 76 ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கும். LIC ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டத்தில் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிகப் பயன் கிடைக்கும்.
இந்த செய்தியையும் படிங்க…
Post Office Super Scheme :ஒரு முறை முதலீடு; மாதம் தோறும் வருமானம்..!!
இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் முதலீடு மற்றும் காப்பீடு ஆகிய இரண்டின் பலனையும் பெற முடியும். 24 வயது நிரம்பிய ஒருவர் ரூ.5 லட்சம் பாலிசியை தேர்ந்தெடுத்தால் அவர் ரூ.26,815 பிரீமியம் செலுத்த வேண்டும். அதாவது மாதத்துக்கு ரூ.2,281.
ஒரு நாளைக்கு 76 ரூபாய்:
ஒரு நாளைக்கு 76 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்ய வேண்டும். அடுத்த 21 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.5,63,705 ஆக இருக்கும்.
திட்டத்தின் முதிர்வுக் காலத்தில் போனஸ் தொகையுடன் சேர்த்து உங்களுக்கு மொத்தம் ரூ.10.33 லட்சம் கிடைக்கும்.