SUB REGISTRAR OFFICE-ல் இடைத்தரகர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை:அமைச்சர்..!! - Tamil Crowd (Health Care)

SUB REGISTRAR OFFICE-ல் இடைத்தரகர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை:அமைச்சர்..!!

SUB REGISTRAR OFFICE-ல் இடைத்தரகர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர்..!!

பத்திரப் பதிவு அலுவலகங்களில் (SUB REGISTRAR OFFICE) இடைத்தரகர்களைப் பயன்படுத் தினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் காலதாமதமின்றி பதிவுகளை மேற்கொள்ள புதிய வசதிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்த செய்தியையும் படிங்க… 

 BIG ALERT: மோசடி செய்யும் நபர்களிடமிருந்து யாரும் ஏமாறக்கூடாது -ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம்..!! 

மதுரை மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நேற்று இரண்டாம் நாளாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

ஒத்தக்கடை, சோழவந்தான், அலங்காநல்லூர் என 6 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

CORONA பரவலைத் தடுக்க, கூட்டத்தைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பின்பற்றி பத்திரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். தாமதமின்றி உடனே பதிவு செய்யப்பட வேண்டும். வில்லங்கச் சான்றிதழ் (EC)மற்றும் நகல்களை மறுநாளே வழங்க வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் வழங்கவும், ஒலிபெருக்கி மூலம் டோக்கன் எண், பெயர், பதிவு நடக்கும் நேரம் பற்றிய விவரங்களைப் பதிவுதாரர்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத் தியுள்ளோம்.

இந்த விவரங்கள் அனைத்தும் அலுவலகத்தின் முகப்பில் வைக் கப்படும் மின்னணுத் திரையில் தெரிய வேண்டும். இந்த நேரத் துக்கு வந்ததும் உடனே பதிவு செய்து மக்களை அனுப்பிவிட வேண்டும். அவர்கள் அதிகநேரம் காத்திருக்கும் நிலை இருக்கக் கூடாது.

மாநிலத்திலுள்ள 575 பதிவு அலுவலகங்களிலும் இந்த நடை முறை அமல்படுத்தப்படும். முதற்கட்டமாக மதுரை பதிவு மாவட்டத்தில் உள்ள 102 பதிவு அலுவலகங்களில் இந்த வசதிகள் உருவாக்கப்படும். பத்திர எழுத்தர்கள், பதிவாளர்கள் இடையே இடைத்தரகர்களை பயன்படுத்தக் கூடாது.

லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களிடம் நியாயமான கட்டணம் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். இது குறித்து 575 பதிவு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னறிப்பு இன்றி அடிக்கடி ஆய்வு நடத்தப்படும்.

இந்த செய்தியையும் படிங்க… 

கருப்புப் பணம் (Black Money)வங்கிகளில் டெபாசிட் :வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு..!!

மதுரையில் ரூ.70 கோடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் அமையவுள்ள நூலகத் துக்கான இடம் ஓரிரு நாளில் தேர்வு செய்யப்படும்.

Leave a Comment