SUB-REGISTRAR OFFICE காலதாமதமா? குறைகளா? -மக்கள் புகார் அளிக்க வசதி..!! - Tamil Crowd (Health Care)

SUB-REGISTRAR OFFICE காலதாமதமா? குறைகளா? -மக்கள் புகார் அளிக்க வசதி..!!

 SUB-REGISTRAR OFFICE காலதாமதமா? குறைகளா? -மக்கள் புகார் அளிக்க வசதி..!!

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு( SUB-REGISTRAR OFFICE)  வரும் பொதுமக்களுக்கு கால தாமதமோ, அல்லது குறைகள் இருந்தாலோ உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 இந்தச் செய்தியையும் படிங்க…  

 மக்களின் நலன் கருதி CORONA கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்..!!  

சென்னை சாந்தோமில் உள்ள பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதியை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் செயலாளர்கள், பத்திரப்பதிவு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 575 பத்திர அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கால தாமதமோ, அல்லது குறைகள் இருந்தாலோ உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் மூன்று செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 9498452110, 9498452120, 9498452130 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம். வாட்ஸ் அப் மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புகாரின் தன்மை குறித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்தச் செய்தியையும் படிங்க…  

AADHAAR – PAN இணைப்பு: JUNE 30 கடைசி தேதி..!!  

பத்திரப்பதிவு பொறுத்தவரை, சமூக இடைவெளியுடன், நாள் ஒன்றுக்கு 50 டோக்கன் அளிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன, CORONA காலம் என்பதால் எதிர்பார்த்தபடி பத்திரப்பதிவு நடைபெறவில்லை” என தெரிவித்தார்.

Leave a Comment