SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இந்த சலுகைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??
SBI வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு பல்வேறு சலுகைகளை அந்த வங்கி வழங்குகிறது.
அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, தனியார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்குமே தற்போது வங்கி கணக்குகள் மூலமாகவே சம்பளம் வழங்கப்படுகிறது.. அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையான SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
கொரோனாவில் இருந்து தப்புவது எப்படி? – புதிய பரிந்துரைகள்..!!
மேலும் வாடிக்கையாளர்கள் பூஜ்ஜிய நிலுவைத் தொகையில் (zero balance) தங்களது சம்பள கணக்கை திறக்க முடியும்.அரசுத்துறை, மத்திய, மாநில அரசு, பாதுகாப்பு துறை, ரயில்வே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறை, இந்திய கடற்கரை மற்றும் பாதுகாப்புத்துறை பென்ஷனர்களுக்கான சம்பள ‘பேக்கேஜ்’ திட்டங்கள் SBI வங்கியில் வகைப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் ராணுவம், பாதுகாப்பு, காவல், தீயணைப்பு உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும், அவர்கள் விபத்து, போர், துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களில் உயிரிழந்தால் அவர்களுக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி பிற அரசுத் துறையில் பணிபுரிவர்களுக்கு பேக்கேஜ் திட்டத்தில் சலுகைகள் உள்ளன. ரூ.25 ஆயிரம் வரை சம்பள வாங்கும் ஊழியருக்கு ரூ.1 லட்சமும், ரூ. 50 ஆயிரம் சம்பளம் பெறும் நபருக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும்.. இதே போல், ரூ. 50 ஆயிரம் முதல் 1 லட்சம் சமபளம் வாங்குவோருக்கு, ரூ.15 லட்சமும் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குவோருக்கு ரூ. 20 லட்சமும் இந்த ‘பேக்கேஜ்’ திட்டத்தில் வழங்கப்படுகிறது.. எனவே சம்பளம் வாங்கும் நபர் உயிரோடு இல்லை என்றாலும், பொருளாதார அவரது குடும்பத்திற்கு உதவ இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க…
அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் -ஓராண்டுக்கு நிறுத்தம்..!!
தனி நபர் கடன், வீட்டு கடன், கார் கடன், கல்விக் கடன் என பல வகை கடன்களிலும், கடன் செயல்பாட்டுக் கட்டணத்தில் (Processing fee) 50% தள்ளுபடியை SBI வழங்குகிறது.
SBI சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாக்கர் கட்டணத்தில் 25% வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது..