SBI – வாடிக்கையாளர்களுக்குப் புதிய அறிவிப்பு..!!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களுக்குப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, SBI அடிப்படை சேமிப்புக் கணக்கில் பல புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க…
மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் – வேலைவாய்ப்பு..!!
அதன் படி ஜூலை 1ஆம் தேதி முதல், SBI அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சேவை கட்டணங்கள் நடைமுறைக்கு வரும். ATMல் பணம் எடுப்பது, செக் புக் சேவைகள், பணம் அனுப்புவது போன்றவைகளுக்கு புதிய கட்டண விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.
SBI அடிப்படை சேமிப்புக் கணக்கு திறப்பதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது KYC ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை பூஜ்ஜியமாக கணக்கில் கொள்ளப்படும். அடிப்படை சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு ரூபே ATM கார்டு வழங்கப்படும்.வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் இல்லை. அதேபோல் இந்த கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என்றாலும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கு வைத்திருப்போருக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் கிடையாது.
வாடிக்கையாளர் ஒருவர் ஒரு மாதத்தில் தனது அடிப்படை சேமிப்புக் கணக்கில் 4 முறை இலவசமாகப் பணத்தை எடுக்கலாம். அதைத் தாண்டி எடுத்தால் பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ.15 கட்டணம் மற்றும் GST வசூலிக்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க…
60 வயது வரை முழு சம்பளம், காப்பீடு, கல்வி – டாடா நிறுவனம் அறிவிப்பு..!!
SBI வங்கி மற்றும்SBI வங்கி அல்லாத வங்கி கிளைகளில், இந்த அடிப்படை சேமிப்பு கணக்கினை வைத்திருப்பவர்கள், நிதி அல்லாத பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் எந்த கட்டணமும் இருக்காது என்றும் அறிவித்துள்ளது.