SBI முக்கிய அறிவிப்பு: ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பது எப்படி(HOW TO LINK AADHAAR CARD TO PAN CARD)..??
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் எங்கள் வாடிக்கையாளர்கள் தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து பெற தங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். மேலும் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. எனவே வருமான வரியின் incometaxindia.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று இணைத்துக்கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பது எப்படி.?
- Income tax அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindiaefiling.gov.in என்ற பக்கத்திற்கு செல்லவும்.
- அதில் LINK Aadhaar என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, உங்களின் பான் எண், ஆதார் எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை உள்ளிடவும். தகவல்கள் அனைத்தையும் உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
- பான் இணைப்பு பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஆதாரில் இருந்து வரும்.
- உங்களிடம் ஆன்லைன் வசதி இல்லை என்றால் இவ்வாறு உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்துக்கொள்ளலாம்.