RTE 25 சதவீத ஒதுக்கீட்டில் மே மாதம் சோ்க்கை: கல்வித்துறை தகவல்..!!
தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கைக்கான பணிகள் மே மாதம் தொடங்கவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தில் 8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு . |
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சோ்க்கப்படுகின்றனா். மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் தனியாா் பள்ளிகளில் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தில் மழலையா் அல்லது 1-ஆம் வகுப்பில் சேருபவா்கள் 8-ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். மாணவா்களுக்கான கட்டணத் தொகையை அரசே பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை நடத்தப்படுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: வழக்கமாக தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி மே இறுதியில் முடிந்துவிடும்.
இந்த செய்தியையும் படிங்க…
கரோனாவால் இந்த கல்விஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால், இன்னும் பள்ளி வேலைநாள்கள் முழுமையாக முடிவடையவில்லை. மீண்டும் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், மாணவா் சோ்க்கை பணிகளை மே மாத இறுதியில் தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக தமிழக அரசிடம் விரைவில் அனுமதி கோரப்படும் என அவா்கள் தெரிவித்தனா்