Remdesivir மருந்து குறித்து -சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த முக்கிய தகவல்..!!
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க….
பிளஸ் 2( 2) வினாத்தாள் லீக்- தடுக்க பாதுகாப்பு..!!
தமிழகத்திலும் (Tamil Nadu) தொற்று நாளுக்கு நாள் மேல் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மருத்துவ வசதிகளுக்காக தட்டுப்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கொரோனா தொற்று குறித்த தரவுகளை தெரிவித்த அவர், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். ஒரே நாளில் நாடு முழுவதும் 2,620 பேரும் தமிழகத்தில் 78 பெரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது என்றார்.
தமிழகத்தைப் பொறுத்த வரை 95,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் ( Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 48,289 பேர் வீட்டுத் தனிமையில் இருந்துகொண்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். வீட்டில் சிகிச்சைப்பெற்று வருபவர்களின் சதவீதம் 50.8 ஆகும். கொரோனா தொற்று பராமரிப்பு மையங்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் சதவீதம் 8.85 ஆகும். மருத்துவமனைகைளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 24,569 ஆகும். இது மொத்த எண்ணிக்கையில் 25.8 சதவீதம் ஆகும்.
ராதாகிருஷ்ணன் பொது மக்களுக்கு அளித்த முக்கிய தகவல்கள்
சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன், “கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டால் கண்டிப்பாக உடனடியாக காய்ச்சல் முகாம்களில் சென்று சோதனை செய்துகொள்ளுங்கள். அங்குள்ள மருத்துவர்கள் உங்களை சோதித்த பின்னர், உங்களுக்கான சிகிச்சை முறையை வழங்குவார்கள். அவசர மற்றும் சிக்கலான நேரங்களில் 108 அல்லது 0444- 6122300 என்று எண்களை பொதுமக்கள் அழைக்கலாம். அதே போல 104 எண்ணையும் அழைக்கலாம். அனைவரும் மருத்துவமனைக்கு வரவேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் பதட்டமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்.” என்றார்.
ரெம்டெசிவிர் மருந்து யாருக்குத் தேவை
சமீப நாட்களாக ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. இது குறித்து விளக்கமளித்த ராதாகிருஷ்ணன், “தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது. சிலர் ரெம்டெசிவிர் மருத்துகளை வீடுகளில் எடுத்துக்கொள்கின்றனர். அவ்வாறு செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்கள் மட்டும் ரெம்டெசிவிரை எடுத்துக்கொண்டால் போதும். அடுத்த 10 நாட்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது மருத்துவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த செய்தியையும் படிங்க….
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு- விழிப்புணர்வு பணி ? – தினமலர் செய்தி..!!
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பற்றியும் ராதாகிருஷ்ணன் கூறினார். “சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் கூடுதலாக 2,400 ஆக்ஸிஜன் கொள்கலன்களை கூடுதலாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கலனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகர் புறநகர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன் அமைக்கப்பட உள்ளது” என்று ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் விவரித்தார்.