Rashtriya India Military College -Dehradun: நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!
TNPSC மூலம் Dehradun-ல் உள்ள Rashtriya India Military College -யில் 2022 -ஜனவரி பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியையும் படிங்க…
AADHAAR – PAN இணைப்பு: JUNE 30 கடைசி தேதி..!!
இது குறித்து TNPSC வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கையின்படி, JUNE 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த Dehradun-ல் உள்ள ராஷட்ரிய இந்திய ராணுவக் கல்லூரிRashtriya India Military College-யில் 2022 -ஜனவரி பருவத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியானது JUNE 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தேர்விற்கான எழுத்துத் தேர்வானது தற்போதைய கரோனா பெருந்தொற்று சூழ்நிலை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.