Post Office Super Scheme :ஒரு முறை முதலீடு; மாதம் தோறும் வருமானம்..!!
இன்றைய காலகட்டத்தில் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய விரும்பும் அனைவருக்கும் சரியான தேர்வு தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டங்கள்தான்.
இந்த செய்தியையும் படிங்க…
Post office scheme:ஆண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் செல்வ மகன் சேமிப்பு திட்டம்..!!
(MIS) :
ஓய்வு காலத்தில் நிலையான வருமானம் பெற மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டத்தில்(MIS) முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஐந்து வருடங்களை நிறைவு செய்யும்போது, நீங்கள் ஒரு உத்தரவாதமான மாதாந்திர வருமானத்தைப் பெறத் தொடங்குவீர்கள்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, ஒருவர் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் சேர தபால் அலுவலகத்தில் விண்ணப் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று சமர்பிக்கலாம்.
அடையாள ஆவணம்,
முகவரி ஆவணம்,
2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை கொடுக்க வேண்டும்.
முதிர்வு காலம்:
இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் 5 ஆண்டுகள் முதிர்வு காலமாகும். முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் நீட்டித்துக் கொள்ளலாம். ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
கூட்டு சேமிப்பு திட்டம்:
இந்த திட்டத்தினை தனிநபர் அல்லது கூட்டு சேமிப்பு திட்டமாகவும் தொடங்கிக் கொள்ள முடியும். கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.
கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் செய்யும் முதலீடு அவர்களுக்கு சமமான பங்கு இருப்பதாக கருதப்படும்.
வட்டி விகிதம்:
அஞ்சலகத்தின் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது சிம்பிள் (Simple interest ) தான். நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல அந்த முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது.
இந்த செய்தியையும் படிங்க…
PF (பிஎஃப்) விதிகளில் இந்த நிதியாண்டு முதல் புதிய மாற்றம் செய்துள்ளது- மத்திய அரசு..!!
முதிர்வு காலம்:
இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். எனினும் இடையில், அதாவது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும்.