POST OFFICE SCHEME: 5 வருடத்தில் ரூ. 6 லட்சம் வரை லாபம்..!! - Tamil Crowd (Health Care)

POST OFFICE SCHEME: 5 வருடத்தில் ரூ. 6 லட்சம் வரை லாபம்..!!

 POST OFFICE SCHEME: 5 வருடத்தில் ரூ. 6 லட்சம் வரை லாபம்..!!

பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம் இவை இரண்டும் தரக்கூடிய ஏகப்பட்ட திட்டங்கள் போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பில் உள்ளன. அதில் ஒரு திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்று திட்டம்.

இந்த செய்தியையும் படிங்க…

Post office scheme:ஆண் குழந்தைகளுக்காக  அஞ்சல் துறையில் செல்வ மகன் சேமிப்பு திட்டம்..!! 

முதலீட்டாளர்களுக்கு குறைந்த ஆண்டில் நல்ல பலனை கொடுக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டமாக இது இருக்கும். தபால் நிலையங்களில் செயல்பாட்டில் இருக்கும் தேசிய சேமிப்பு சான்று (National Saving Certificate) திட்டம். 

சிறப்பம்சங்கள்:

இந்த திட்டத்தில் நீங்கள் தொடர் வைப்பு நிதி திட்டங்களைக் காட்டிலும் நல்ல வட்டி பெறலாம். இதில் NSC-யில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் ஆண்டுதோறும் வட்டியைச் சேர்க்கும், ஆனால் அதே நேரம் முதிர்வு தொகையும் உங்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என நிர்ணியிக்கப்பட்டுள்ளது.தேவைப்பட்டால் முதிர்வுக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம்.

இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பு:

இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச முதலீடு ரூ .100 ஆகும். அதிகபட்ச வரம்பு என்று எதுவும் இல்லை.இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பு வரிசலுகை தான். முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் உங்களுடைய லாபம் இரட்டிபாகும். உங்கள் கைக்கு வரும் முதிர்வு தொகை முழுசாக உங்களுக்கு கிடைக்கும்.

ரூ 100, ரூ 500, ரூ 1000, ரூ 5000 மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள சான்றிதழ்களை வாங்குவதன் மூலம் இந்த திட்டத்தில் முதலீடை தொடங்கலாம். குறிப்பாக ஒரு ஆண்டில் முதலீட்டாளரின் முதலீடு தொகை ரூ. 15 லட்சம் என்றால், 5 வருடத்தில் ரூ. 20.85 லட்சமாக தன்னுடைய பணத்தை அவர் திரும்ப பெற முடியும். இந்த திட்டத்தில் அவர் முதலீடு செய்ததன் மூலம் வெறும் 5 வருடத்தில் ரூ. 6 லட்சம் வரை வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையை பெறுவார். இதே போல் தான் முதலீடு தொகையை பொருத்து முதிர்வு தொகை மாறுபடும். ஆனால் 5 வருடத்திற்கு கிடைக்கும் வட்டி ஒன்று தான்.

Leave a Comment