Post Office FD: அதிக வட்டி தரும் SCHEME தேர்வு பண்ணுங்க..!!
தபால் நிலையத்தின் நிலையான வைப்புத்தொகை(FD) முதலீட்டிற்கு பாதுகாப்பானது மற்றும் சிறந்த வருவாயை தரக்கூடியது. நிலையான வைப்புத்தொகைக்கு அதிக வட்டி விகிதங்கள் உட்பட சிறந்த சேமிப்பு திட்டங்களை தபால்துறை வழங்குகிறது. POST OFFICE-ல் FD கணக்கு தொடங்குவது மிகவும் எளிதானது. தபால் அலுவலகத்தில் ஒரு பயனர் 1,2,3 மற்றும் 5 ஆண்டுகள் முதிர்ச்சியுடன் FIXED DEPOSITN வசதியை பெற முடியும். சம்பளதாரர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இது இருக்கும்.
இந்த செய்தியும் படிங்க…
தங்க நகைகளுக்கு HALLMARK கட்டாயம்: மக்களிடம் இருக்கும் HALLMARK அல்லாத பழைய நகைகளை வாங்க அனுமதி..!!
இந்த ரக கணக்கை யார் வேண்டுமானாலும் தனியாகவோ (Individual Account) அல்லது இணைந்தோ (Joint Account) தொடங்கலாம். தனி கணக்கை இணைப்புக் கணக்காகவோ, இணைப்புக் கணக்கை தனி கணக்காகவோ மாற்றிக் கொள்ளலாம்.
கணக்கை ரொக்கம் செலுத்தியோ அல்லது காசோலை செலுத்தியோ தொடங்கலாம். ONLINE-ம் தொடங்கலாம்.
கணக்கை திறப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.1000 இருந்தால் போதும். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.
1 முதல் 3 வருட FD கணக்குகளுக்கு 5.50% வட்டி வழங்கப்படுகிறது. 3 முதல் 5 வருட FD கணக்குகளுக்கு 6.70% வட்டி வழங்கப்படுகிறது.
டெபாசிட் தொகைக்கு நாமினியை நியமிக்கலாம்.
ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். எந்த அஞ்சலக அலுவலகம் மூலம் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தவோ அல்லது பணத்தை வெளியே எடுக்கவோ முடியும். முக்கியமாக ஏடிஎம் வசதி உண்டு.
இந்த Term Deposit-களை இந்தியாவின் எந்த அஞ்சலக அலுவலகத்துக்கும்(PO) மாற்றிக் கொள்ளலாம்
ஒருவர் ஐந்து வருடFD-டில் முதலீடு செய்யும் தொகைக்கு மட்டும் வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம்.
இந்த செய்தியும் படிங்க…
SSY(செல்வமகள் சேமிப்பு திட்டம்): கணக்கு தொடங்குவது எப்படி.? என்னென்ன பயன்கள்..??